இனி வாட்ஸ் அப்பில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்.. தமிழக அரசின் வசதி பற்றி முழு விவரம்
சென்னை: தமிழக அரசு பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்த, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை வாட்ஸ்அ மூலமாகவே பதிவிறக்கம் செய்யும் புதிய வசதியை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மற்றும் பிற பகுதிகளில், மக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், பதிவு எண் மற்றும் மருத்துவமனை விவரங்களைக் கொண்டு, வாட்ஸ்அப் சாட்போட் (chatbot) மூலமாக உடனடியாக சான்றிதழ்களைப் பெறமுடிகிறது,
பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அவர்களுக்கான சேவையை விரைந்து வழங்கிடவும் தமிழக அரசு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் கைகோர்த்ததது. அதன்படி வாட்ஸ் அப் உடன் இணைந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல் உட்பட 50 சேவைகளை தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

இது குறித்து தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்கள் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதலில் ஒரு புரட்சிகரமான மைல் கல்லாக, தமிழ்நாடு மின்னாளுமை முகமை "நம்ம அரசு'' வாட்ஸ்-அப் சாட்பாட் சேவையை மாநிலத்தின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மாநாடான உமாஜின்- 2026 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
"நம்ம அரசு'' வாட்ஸ்-அப் சாட்பாட் சேவையின் மூலம், பொதுமக்கள் அரசு சேவைகளைத் தங்களது செல்போன் வழியாகவே எளிதாகப் பெற முடியும். இதன் மூலம் இணையதள வழிமுறைகள் மூலம் ஏற்படும் சிரமங்களோ அல்ல அப் எண்ணின் மூலம் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம் என்று கூறியுருந்தது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் "நம்ம அரசு'' திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்திருந்தார். இந்த திட்டத்தின் முதல்கட்டமாக உள்ளாட்சித்துறை சேவைகள், இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த பக்தர்களுக்கான சேவைகள், மின்சார வாரிய கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகள் தற்போது வாட்ஸ்-அப் மூலம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்களை, 7845252525 என்ற வாட்ஸ்அப் (whatsapp) எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பெறமுடியும்.
இது தொடர்பாக பேஸ்புக் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் அப்போது கூறுகையில், "மக்களுக்கு இனி அரசு சேவைகள் வாட்ஸ்அப்பில் மிக எளிதாக கிடைக்கும். அதோடு கால தாமதமின்றி விரைவிலேயே சான்றிதழ்கள் கிடைப்பது தான் இதன் முக்கிய நோக்கம். சான்றிதழ் தொடர்பான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பொதுமக்கள் குறுந்தகவல் அனுப்பிய ஒரு சில நாட்களில் சான்றிதழ்கள் வாட்ஸ்அப் வழியாகவே அனுப்பப்படும்" என்றார். எனவே 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாக எளிதாக பிறப்பு சான்றிதழை பெற முடியும்" என்று கூறியிருந்தார்.
7845252525 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவது எப்படி. இது சென்னை மாநகராட்சி மற்றும் பிற நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ள ஒரு தானியங்கி சேவை ஆகும்.
இதை டவுன்லோடு செய்யும் முறை இதோ:
டவுன்லோடு செய்யும் வழிமுறைகள்:
எண்ணைச் சேமிக்கவும்: முதலில் உங்கள் செல்போனில் 7845252525 என்ற எண்ணைச் சேமித்துக் கொள்ளவும்.
மெசேஜ் அனுப்பவும்: உங்கள் வாட்ஸ்அப் செயலிக்குச் சென்று, அந்த எண்ணிற்கு 'Hi' அல்லது 'வணக்கம்' என்று மெசேஜ் அனுப்பவும்.
மொழியைத் தேர்வு செய்யவும்: உங்களுக்கு விருப்பமான மொழியை (தமிழ் அல்லது ஆங்கிலம்) தேர்வு செய்வதற்கான ஆப்ஷன் கிடைக்கும.
சேவையைத் தேர்ந்தெடுக்கவும்: வரும் பட்டியலில் 'Birth Certificate' (பிறப்புச் சான்றிதழ்) அல்லது 'Death Certificate' (இறப்புச் சான்றிதழ்) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
விவரங்களைப் பதிவு செய்யவும்: * சான்றிதழைத் தேடப் பிறந்த/இறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்களைக் கேட்கும்.
அல்லது உங்களிடம் Registration Number இருந்தால் அதை நேரடியாக பதிவு செய்ய வேண்டும்.
டவுன்லோடு எப்படி... நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானதாக இருந்தால், உங்கள் சான்றிதழ் ஒரு PDF கோப்பாக வாட்ஸ்அப்பிலேயே வந்துவிடும். அதை நீங்கள் அங்கேயே டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications