"போன் பே" இருந்தாலே போதும்.. இனி சென்னை மெட்ரோவில் ஜாலியாக பயணிக்கலாம்.. ஒரு செகண்ட் கூட வேஸ்ட் ஆகாது
சென்னை: தலைநகர் சென்னையில் மெட்ரோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மெட்ரோ பயணச்சீட்டு பெற இப்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாலைகளில் டிராபிக் புதிய உச்சத்தைத் தொடும் நிலையில் பொதுமக்கள் ஆர்வமாக மெட்ரோவை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே மெட்ரோ பயணிகளின் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணிக்க ஏற்ப சென்னை மெட்ரோவில் பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இப்போது மற்றொரு அட்டகாசமான வசதியைச் சென்னை மெட்ரோ கொண்டு வந்துள்ளது.
சென்னை மெட்ரோ: மெட்ரோ பயணிகள் எளிமையாகப் பயணச்சீட்டுகளை புக் செய்ய புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் பிறகு பயனாளர்கள் போன் பே செயலி மூலம் டிக்கெட்களை புக் செய்து கொள்ளலாம். இந்த சேவை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் போன் பே மூலமாக தங்கள் மெட்ரோ டிக்கெட்களை எடுத்துக் கொள்ளலாம்.
சென்னை மெட்ரோவை பொறுத்தவரை முதலில் டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள் மூலமே டிக்கெட் எடுக்கும் முறை இருந்தது. பொதுமக்கள் வசதிக்காக பேடிஎம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த மே 17 முதல் நவ.15 வரை 9,34,882 பேர் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் எடுத்துள்ளனர். அதேபோல கடந்த ஆகஸ்ட் 4 முதல் நவ. 15 வரை பேடிஎம் மூலம் 9,26,301 பேர் மெட்ரோ டிக்கெட் எடுத்துள்ளனர். இந்தச் சூழலில் தான் போன் பே மூலம் டிக்கெட் எடுக்கும் முறை இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போன் பே: ஏற்கனவே மும்பை ஹைதராபாத், டெல்லி ஆகிய பெருநகரங்களில் போன் பே மூலம் மெட்ரோ டிக்கெட் எடுக்கும் வசதி இருக்கும் நிலையில், இப்போது சென்னை மெட்ரோவிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகச் சென்னை மெட்ரோ மற்றும் போன் பே நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்த்து நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது. மேலும், போன் பே மூலம் டிக்கெட் எடுக்கும் போது 20% கட்டண தள்ளுபடியையும் பெற முடியும்.
புக் செய்வது எப்படி: மெட்ரோ இரயில் பயணிகள் தங்கள் போன் பே (PhonePe) செயலியில் ஸ்விட்ச் (Switch) பகுதியில் டாக்ஸி & மெட்ரோ பிரிவின் கீழ், சென்னை மெட்ரோ இரயில் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் பயணிகளின் எண்ணிக்கை, நுழையும் மற்றும் வெளியேறும் மெட்ரோ இரயில் நிலையத்தைக் குறிப்பிட்டு ஒரு வழிப் பயணத்தைத் தேர்வு செய்து யுபிஐ மூலம் பணம் செலுத்தவும்.
வெற்றிகரமாகப் பணம் செலுத்திய பின்னர் போன் பே செயலியில் டிஜிட்டல் QR குறியீடு உருவாக்கப்படும். மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள நுழைவு மற்றும் வெளியேறும் நிலையங்களில் உள்ள தானியங்கி கட்டண வசூல் வாயில்களின் QR குறியீடு ஸ்கேனரின் முன் பயணிகள் தங்கள் ஸ்மார்ட் போனை வைத்த பின்னர் மெட்ரோ பயணத்தை மேற்கொள்ளலாம்.
மூன்று புதிய வசதிகள்: பயணிகள் தங்கள் ஸ்மார்ட் போனில் ஒரே நேரத்தில் ஆறு நபர்களுக்கான பயணச்சீட்டுகளை பதிவு செய்து ஆறு வெவ்வேறு க்யூ.ஆர் குறியீடு பயணச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து ஒரே ஸ்மார்ட் போன் வாயிலாக ஆறு வெவ்வேறு க்யூ.ஆர் குறியீடு பயணச்சீட்டுகளை ஸ்கேன் செய்யலாம்.
போன் பே ஸ்விட்சில் மெட்ரோ பிரிவின் கீழ் ஒரு வழிப் பயணம். இரு வழிப் பயணம் மற்றும் பயண அட்டையை ரீசார்ஜ் செய்தல் என 3 முக்கிய சேவைகளை அறிமுகப்படுத்தச் சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக போன் பே மூலம் ஒரு வழிப் பயணத்திற்கு டிக்கெட் புக் செய்யும் வசதி மட்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. மற்ற இரண்டு சேவைகளும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சென்னை மெட்ரோ வட்டாரங்கள் கூறுகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications