அரசு பஸ்சில் புக் பண்ணி போறீங்களா.. போக்குவரத்து கழகம் கொண்டு வந்த செம பிளான்.. அதென்ன புது லிங்க்
சென்னை: அரசு பேருந்தில் முன்பதிவு செய்து செல்லும் பயணிகளுக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை போக்குவரத்து தூறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார். அது என்ன வசதி என்று இங்கே விரிவாக பார்க்கலாம்
தமிழகத்தில் பணி நிமித்தமாகவும் தொழில் காரணங்களுக்காகவும் சென்னை போன்ற நகரங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெருமளவில் வசித்து வருகிறார்கள். பண்டிகை காலங்களிலும் கோடை விடுமுறையின் போதும் இவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவதுண்டு. ரயில்களில் டிக்கெட்டுகள் கிடைக்காத பட்சத்தில் பயணிகள் அடுத்து நாடுவது அரசு பேருந்துகளைத்தான்.
தனியார் ஆம்னி பேருந்துகளை பொருத்தவரை கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது பயணிகள் கூட்டம் அரசு பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மதுரை உள்பட தொலை தூரங்களுக்கு செல்லும் பேருந்துகள் பயணிகள் சற்று இளைப்பாற தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மோட்டல்களில் நிறுத்துகின்றன.

இந்த பயண வழி உணவகங்களின் உணவின் தரம் மோசமாக இருப்பதாகவும் தின்பண்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவ்வப்போது பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. இதுபோன்ற புகார்களுக்கு உள்ளாகும் பயண வழி உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு தரம் குறைவாக இருந்தால் உடனடியாக தமிழக போக்குவரத்து நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இருந்தாலும் பயண வழி உணவகங்களில் சேவை குறைபாடு இருப்பதாக அவ்வப்போது பயணிகள் குற்றச்சாட்டுக்கள் வைத்துக் கொண்டுதான் உள்ளனர். இந்த நிலையில், பயணிகள் வசதிக்காக தமிழக போக்குவரத்து கழகம் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், பயணிகளின் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக குறிப்பிட்ட இடைவெளியில் திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலமாக தேர்வு செய்யப்பட்ட உணவகங்களில் நிறுத்தப்பட்டு வருகின்றன. உணவுக்காக நிறுத்தப்படும் உணவகங்களில் உணவின் தரம், கழிப்பிட வசதி, பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து அவ்வப்போது பேருந்து பயணிகளிடம் இருந்து புகார்கள் கிடைக்க பெறுகிறது.
இந்த புகார்களின் அடிப்படையில் அனைத்து போக்குவரத்து கழகத்தில் உள்ள அலுவலர்கள் தங்கள் அலுவலக கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள உணவகங்களில் அடிக்கடி ஆய்வு செய்து புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனை மேலும் மேம்படுத்தும் விதமாக உணவகங்கள் குறித்த புகார்களை பயணிகள் தெரிவித்திட 'Feed back Link' அறிமுகப்படுத்தப்பட்டு ரிசர்வேஷன் செய்து பயணம் செய்யும் பயணிகளின் செல்போன் எண்ணுக்கு இந்த லிங்க் பயணத்தின் முன்பாக அனுப்பப்படும்.
இந்த லிங்கில் பயணிகள் உணவகங்களில் உள்ள குறை மற்றும் நிறைகளை பதிவிட்டு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளிடம் இருந்து இதன் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகவே, முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் தங்களது பேருந்து இயக்கம் தொடர்பான புகார் மற்றும் உணவகங்கள் தரம் தொடர்பான கருத்துகளை இந்த 'லிங்க்' மூலம் தெரிவிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications