குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால்.. இனி பின் சீட்டில் இருப்பவர்களுக்கும் ஃபைன்.. தமிழ்நாடு அரசு அதிரடி
சென்னை: தமிழ்நாடு சாலை போக்குவரத்து விதிகளில் முக்கியமான பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் இன்றில் இருந்து போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களுக்கான அபராத தொகையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதற்கு முன் இருந்த அபராத தொகைகள் தற்போது அதிகரிக்கப்பட்டு உள்ளன.
முக்கியமாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, சாலைகளில் ஸ்டண்ட் செய்வது போன்ற விதி மீறல்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

அபராதம்
அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி அவருடன் பயணிக்கும் நபருக்கும் இனி அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இனி 1000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இதற்கு அபராதம் விதிக்க முடியும். காருக்கும் இதே விதி பொருந்தும். அதாவது காரில் டிரைவர் மது அருந்தி இருந்தால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும்.

மது
காரில் பயணிக்கும் மற்ற நபர்களுக்கும் இதே அபராதம் பொருந்தும். அதாவது பயணிகளிடமும் தனியாக அபராதம் விதிக்கப்படும். ஆனால் வாடகை வாகனங்களில் செல்லும் பயணிகளுக்கும், ஆட்டோவில் செல்லும் பயணிகளுக்கும் இது பொருந்தாது. வாடகை வாகனங்களில் டிரைவர் மது அருந்தி இருந்தால் அவரிடம் மட்டுமே அபராதம் வாங்கப்படும். பயணிகளிடம் வாங்கப்பட்டது என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அபராதம் மாற்றம்
குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை தவிர்க்கவும், அதை ஆதரிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ரேஸிங் செய்யும் வகையில் வண்டி ஓட்டினால் அதற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் தற்போது பைக் ரேஸ் செய்வது அதிகரித்து உள்ளது. பலர் 100 கிமீக்கும் அதிகமான வேகத்தில் காட்டுமிராண்டி தனமாக பைக் ஓட்டும் பழக்கம் அதிகரித்து உள்ளது.

அபராதம்
இதற்கும் தற்போது அபராதம் அமலுக்கு வந்துள்ளது. ரிஜிஸ்டிரேஷன் இல்லாத வாகனத்தை ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.அதேபோல் ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications