ஜூன் 22 இல் முருகரை கையில் எடுப்போம்.. 2026 இல் தமிழ்நாட்டை கையில் எடுப்போம்.. நயினார் நாகேந்திரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் ஜூன் 22 ஆம் தேதி முருகரை கையில் எடுக்க இருக்கிறோம். 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தையே கையில் எடுப்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

முருகன் மாநாடு அரசியல் மாநாடு இல்லை. இது முருக பக்தர்களுக்கான மாநாடு. தமிழகத்தில் தான் முருகனுக்கு விழா எடுக்க முடியும். தலைவர்கள் மட்டுமே மேடையில் இருப்பார்கள். முருகர் பக்தர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் இந்த முருக பக்தர் மாநாட்டில் கலந்துகொள்ளலாம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

now-we-have-taken-muruga-in-our-hands-we-will-take-tamil-nadu-in-our-hands-in-2026-nainar-nagendr

மதுரையில் ஜூன் 22ஆம் தேதி பிரம்மாண்டமாக முருகன் மாநாட்டை நடத்த இந்து முன்னணி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை பாண்டி கோவிலுக்கு அருகிலுள்ள அம்மா திடலில் மாநாடு நடைபெறவுள்ளது. 2026 இல் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநாட்டை பாஜக அரசியல் ஆதாயத்திற்காக நடத்துகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த மாநாட்டுக்கான பாடலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாங்கள் வலியமையாக இருப்பதை அறிந்து கொண்டு திமுகவினர் தற்போது எங்கள் கூட்டணியை குறை கூறுகின்றனர்.

அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எண்ணம் விடுதலை சிறுத்தைகளுக்கு உள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகை தரவுள்ளார். ஆனால், அவரது வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யாண் விரதம் மேற்கொண்டுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் எப்போதும் எந்த பதற்றமான சூழலும் ஏற்பட்டதில்லை. முருகன் மாநாடு அரசியல் மாநாடு இல்லை. இது முருக பக்தர்களுக்கான மாநாடு. தமிழகத்தில் தான் முருகனுக்கு விழா எடுக்க முடியும். தலைவர்கள் மட்டுமே மேடையில் இருப்பார்கள்.

முருகர் பக்தர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் இந்த முருக பக்தர் மாநாட்டில் கலந்துகொள்ளலாம். ஜூன் 22 ஆம் தேதி முருகரை கையில் எடுக்கவிருக்கிறோம். 2026 இல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+