நடிகை பாலியல் பலாத்கார வழக்கில்.. வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார் சீமான்!
சென்னை: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. இந்த சம்மனை கிழித்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காகச் சீமான் இப்போது வளசரவாக்கத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.
நடிகை ஒருவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்தார். சீமான் மீதான இந்தப் புகாரை சம்பந்தப்பட்ட நடிகை திரும்பப் பெற்றுவிட்டார். ஆனாலும், நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, பெங்களூரில் உள்ள அந்த நடிகையின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அங்கு சுமார் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அங்கிருந்து வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள், புகைப்படங்களைக் கைப்பற்றியுள்ளனர். நடிகை பாலியல் வழக்கில் சீமான் ஒத்துழைக்க வேண்டும் என்றும், ஒத்துழைக்காவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீமான் வீட்டில் நேற்று சம்மன் ஒட்டப்பட்டது
ஆனால், ஒட்டப்பட்டவுடனேயே அந்த சம்மன் கிழிக்கப்பட்டது. சம்மன் கிழிக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளருக்கும், சீமான் வீட்டு காவலாளிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீஸார் மற்றும் காவலாளிகளுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவலாளி வைத்திருந்த துப்பாக்கியை போலீஸார் கேட்ட நிலையில் அவர் தர மறுத்தார். ஒரு கட்டத்தில் துப்பாக்கியை தலைக்குமேல் தூக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் காவலாளி சுபாகர், அமல்ராஜ் இருவரையும் கைது செய்தனர். துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளியூர் நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டு இருந்ததால் காலை ஆஜராகவில்லை. மாலை விமானம் மூலம் சீமான் சென்னை திரும்பிய நிலையில், அவர் இப்போது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications