சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பெரியம்மா திராவிட மாடல்..! திமுக ஓராண்டு சாதனையை பார்க்க.. எழவு கரண்ட் இல்லப்பா!" பாயும் சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக அரசு அமைத்து ஓராண்டு நிறைவடையும் நிலையில், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

Recommended Video

    Seeman VS SenthilBalaji | Twitter-ல் நடந்த காரசார விவாதம் | Oneindia Tamil

    மொத்தம் உள்ள 234 இடங்களில் திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றியது. 133 இடங்களை வென்று இருந்த திமுக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியைப் பிடித்தது.

     பயமா இருக்கா.. பயங்கரமா இருக்க போகுது.. கொங்கு மண்டலத்தில் விளாசிய திமுக.. ஆபரேஷன் 2024! பயமா இருக்கா.. பயங்கரமா இருக்க போகுது.. கொங்கு மண்டலத்தில் விளாசிய திமுக.. ஆபரேஷன் 2024!

     மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின்

    இந்த தேர்தலில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்தது. ஆளும் கட்சியாகத் தேர்தலை எதிர்கொண்ட அதிமுக தோல்வி அடைந்தது. அதிமுகவால் வெறும் 66 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்த வெற்றிக்குப் பின்னர், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

    ஓராண்டு

    ஓராண்டு

    "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..." எனக் கூறி முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பதவி ஏற்றார். பதவியேற்ற பின்னர், நேராகத் தலைமைச் செயலகத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில் பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டம் பெண்களுக்குப் பெரியளவில் உதவியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

     புதிய திட்டங்கள்

    புதிய திட்டங்கள்

    திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் புதிய 5 திட்டங்களையும் அறிவித்தார். அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை நேரத்தில் சிற்றுண்டி, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்புத் திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

     மின்வெட்டு

    மின்வெட்டு

    அதேநேரம் ஓராண்டு திமுக ஆட்சியில் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகிறது. குறிப்பாக, கோடைக் காலத்தில் வெப்பம் வாட்டி வதக்கி வரும் நிலையில், மாநிலத்தில் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படுகிறது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மின்வெட்டு பிரச்சினையைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

     கரண்ட் இல்லை

    கரண்ட் இல்லை

    இதனிடையே நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மின்வெட்டு விவகாரத்தை விமர்சித்துள்ளார். இது தொடர்பாகச் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..!" என்று பதிவிட்டுள்ளார்.

     சீமான் தாக்கு

    சீமான் தாக்கு

    முன்னதாக நேற்றைய தினமும் திமுகவின் ஓராண்டு சாதனையை விமர்சித்து சீமான் தனது ட்விட்டரில், "ஓராண்டு கால சாதனை! முழுப்பக்க விளம்பரம்! சென்ற ஆட்சியில் செய்தபோது அது வீண் விளம்பரம்; ஆடம்பரம்! அதையே இவர்கள் செய்தால் அது அவசியச் செலவு!" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    NTK Chief Seeman about powet cut issue in tamilnadu: (தமிழ்நாடு மின்வெட்டு சிக்கல் குறித்து நாம் தமிழர் சீமான்) NTK Chief Seeman slams Tamilnadu govt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X