என்ன பெரிய பிரசாந்த் கிஷோர்..செங்கோட்டையன் யாரு தெரியுமா? புகழ்ந்து தள்ளிய சீமான்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை விடவும் பிரசாந்த் கிஷோர் சிறந்த தேர்தல் வியூக வகுப்பாளரா என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் புகழ்ந்து தள்ளியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பெரியாரை, தாம் யார் சொல்லியும் எதிர்கொள்ளவில்லை என்று கூறிய அவர், படித்துவிட்டுதான் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் அக்கட்சி நிர்வாகிகள் இடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் நாதகவில் இருந்து விலகி வருகின்றனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த பின்னரே பெரியார் மீது விமர்சனங்களை முன் வைக்க தொடங்கினார்.

அந்த வகையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவரும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது சீமான் பேசுகையில், பீகாரில் இருந்து தேர்தல் வியூக வகுப்பாளரை அழைத்து வருகிறார்கள். அதிமுகவில் உள்ள செங்கோட்டையனை கடந்து ஒரு வியூக வகுப்பாளரை எனக்கு தெரியவில்லை.
அப்போதே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எப்போது எங்கு என்ன பேச வேண்டும், எங்கு பயணிக்க வேண்டும், எங்கு உணவு என்று அனைத்தும் செங்கோட்டையனிடம் இருந்துவந்த திட்டங்கள்தான். நான் பெரியாரை எதிர்ப்பதை யாரோ சொல்லி கொடுத்து செய்கிறேன் என்கிறார்கள். நான் படம் பார்த்து கதை சொல்லவில்லை. படித்துவிட்டு கருத்தை முன் வைக்கிறேன். அதற்கு பதில் சொல்லுங்கள்.
நான் கட்சி தொடங்குவதற்காக சென்னைக்கு வரவில்லை. பரமக்குடியில் வண்டி ஏறியது படம் எடுத்து பஞ்சம் பிழைக்கத்தான். காலம் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. சரணடைந்து வாழ்வதற்கு பதில் சண்டையிட்டு சாவோம் என்பதே எங்களின் கோட்பாடு. தேர்தல் முடிவுகளின் போது எங்கள் கட்சியை மற்றும் பலர் என்ற பட்டியலில் தான் போடுகிறார்கள் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் சீமான் பாஜகவுக்கு நெருக்கமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தனியார் பத்திரிகை நிகழ்ச்சியில் பங்கேற்றது கூடுதல் பேசு பொருளாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் செங்கோட்டையன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்ப்புகள் எழுந்த போது, அவர் பங்கேற்று பேசிய கருத்துகள் அதிமுகவிற்குள் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
-
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications