‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மைக் சின்னத்தை தூய தமிழில் 'ஒலிவாங்கி' என்று சொல்லும் போது மக்களுக்கு புரியாத நிலை. மைக் என்று சொல்லவேண்டி இருக்கிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி "மைக்" சின்னத்தில் போட்டியிடுகிறது. கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டதால் சீமானின் நாம் தமிழர் கட்சி இந்த முறை "மைக்" சின்னத்தில் போட்டியிடுகிறது.

NTK Chief Seeman says People could not Understand his party symbol in pure Tamil

இந்த நிலையில், மைக் சின்னத்தை தமிழில் 'ஒலிவாங்கி' என்று சொல்லும் போது மக்களுக்கு புரியாத நிலை. மைக் என்று சொல்லவேண்டி இருக்கிறது என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் கூறியதாவது:-

இப்போது நாம் 90 சதவீதத்திற்கும் மேலாக ஆங்கிலம் கலந்து கலந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். என் கையில் இருக்கின்ற இந்த சின்னத்தை கூட 'ஒலிவாங்கி' என்று தூய தமிழில் சொன்னால், என் மக்களுக்கு புரியாத ஒரு நிலை. இதை மைக் என்று சொல்லக்கூடிய ஒரு நிலை இருக்கிறது. இப்படி தான் மொழி சிதைந்து அழிந்து நாம் அழிந்தோம். தெற்காசியா முழுமைக்கும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள் தான்.

பிறகு மற்ற இனங்கள் எல்லாம் வந்து குடியேறியது. குடியேறியவர்கள் என்று ஹார்டுவெல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜோசப்பும் ரிச்சார்ட் மார்டினும் தங்கள் ஆய்வு கட்டுரையில் நிறுவார்கள். இந்திய அரசியல் சாசனத்தை வகுத்து கொடுத்த அம்பேத்கர் இந்த துணைக்கட்டம் முழுமைக்கும் பரவி விரிந்தவர்கள் தமிழர்கள் தான். இந்த நாட்டை என் நாடு என்று சொந்தம் கொண்டாட ஒரே ஒரு இனத்திற்கு தான் உரிமை உண்டு என்றும், அந்த இனம் தமிழ் இனம் தான் என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டது. இதனால், சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையம், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்துதான் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை ஒதுக்கியது. இதற்கு நாம் தமிழர் கட்சி சார்பில், மைக் சின்னத்திற்கு பதிலாக படகு அல்லது பாய்மரம் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தது. ஆனால் இந்த மனுவை நிராகரித்த தேர்தல் ஆணையம் சீமானி நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தையே ஒதுக்கியது.

நான் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தால் எனக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைத்திருக்கும் என்று சீமான் தெரிவித்து இருந்தார். தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தும் என 4 முனை போட்டி நிலவுகிறது. இன்று வேட்பு மனு பரீசிலனை நடந்தது.

சீமானின் நாம் தமிழர் கட்சியில் 40 வேட்பாளர்களும் அண்மையில் அறிவிக்கப்பட்டனர். ஒரே மேடையில் வைத்து சீமான் 40 பேரையும் அறிமுகம் செய்தார். அவர்களில் 20 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள். சீமானின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்த போது சர்ச்சைக்குரிய வகையில் உறுதிமொழி ஏற்றனர். இதனால் அவர்களுடைய வேட்புமனுக்கள் ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+