வெயிலுக்கு எதிராகக் குடைபிடித்தால் காணாமற் போகுமோ கதிரவன்? சீமானுக்கு ஆதரவாக வந்த வைரமுத்து
சென்னை: சுட்டுரையை முடக்கிவிட்டால் சீமான் தீர்ந்து போவாரா? வெயிலுக்கு எதிராகக் குடைபிடித்தால் காணாமற் போகுமோ கதிரவன்? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழக அரசியலில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் முதல் அவர் போட்டியிட்டு வருகிறார். அதிரடியான ஆக்ரோஷமான பேச்சுக்களால் சீமானின் குரல் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெறுவதாக உள்ளது.

தேர்தலில் யாருடனும் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைத்தது இல்லை. ஆனாலும் அதன் வாக்கு வங்கி மெச்சும் அளவுக்கு உள்ளது. இனி வரும் தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகளை அவ்வப்போது விமர்சனம் செய்து வருவார். அது போல் கருணாநிதியின் பேனாவுக்கு சிலை வைப்பதை கடுமையாக கண்டித்த சீமான், மீறி சிலை வைத்தால் அந்த பேனாவை உடைப்பேன் என்றார்.
அது போல் மக்கள் நல பிரச்சினைகளுக்கும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் அவ்வப்போது குரல் கொடுப்பார். தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கத்திலும் தனது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் நேற்று திடீரென முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த கணக்கு பக்கத்தில் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கி வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அது போல் நாம் தமிழர் கட்சியின் பிற நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:- டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்துவதற்கு முதலில் குரல் கொடுத்தது நாங்கள் தான், எனவே தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டிற்கு பதக்கம் வாங்கி கொடுத்த வீராங்கனைகளை தெருவில் நிற்க வைத்தது குறித்து கேள்வி கேட்டதற்காக தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ட்விட்டர் கணக்கை முடக்கியது எனக்கு மகிழ்ச்சி சந்தோஷம் தான். ஆனால் என்னுடைய குரலை யாராலும் முடக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் சீமானின் ட்விட்ட பக்கம் முடக்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- சுட்டுரையை முடக்கிவிட்டால் சீமான் தீர்ந்து போவாரா? வெயிலுக்கு எதிராகக் குடைபிடித்தால் காணாமற் போகுமோ கதிரவன்? கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்; கை கால்களைக் கட்டாதீர்கள்.. கருத்துரிமை இன்னும் உயிரோடு இருப்பதாக நம்புகிறவர்களுள் நானும் ஒருவன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications