சென்னை வில்லிவாக்கம் வேட்பாளர் ஆகும் திருநங்கை ரோசினி.. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டி!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக மாற்று பாலினத்தவரான திருநர் ரோசினி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாதக சார்பில் திருநங்கை ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருவதால், அரசியல் களம் இன்னும் சூடுபிடித்துள்ளது.

2026 சட்டசபை தேர்தலை, இந்த முறையும் தனித்துக் களம் காண்கிறது நாம் தமிழர் கட்சி. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட உள்ள 234 வேட்பாளர்களையும் ஒரே நிகழ்வில் அறிமுகப்படுத்தும் "மக்களின் மாநாடு" விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக பெரும்பாலான தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் சீமான்.
இந்நிலையில், சென்னை வில்லிவாக்கம் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக திருநர் ச.ரோசினி போட்டியிடுவார் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். வேட்பாளர் அறிமுக கட்டம் வரும் 31 ஆம் தேதி வில்லிவாக்கம் தொகுதியில் நடைபெற உள்ளது.
நாதக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திருநர் ரோசினி ஒரு சமூக செயற்பாட்டாளர். ரோஷினி அறக்கட்டளை நிறுவனரான இவர், இறைவி அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் நாதக சார்பில் களம் காண்கிறார்.
ஏற்கனவே, 2016 சட்டசபை தேர்தலில் ஆர்.கே நகரில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் களம் கண்டார் திருநங்கை தேவி. தேவி தான் தமிழக சட்டசபை தேர்தலில் முக்கிய கட்சியின் சார்பாக போட்டியிட்ட முதல் திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications