விஜய்யை விட பல மடங்கு அதிகம்.. சீமான் அஃபிடவிட்டை டவுன்லோடு செய்தவர்கள் இவ்வளவு பேரா?
சென்னை: தேர்தல் ஆணைய இணையப் பக்கத்தில் வெளியிட்ட பிரமாண பத்திரங்களில் தவெக தலைவர் விஜய்யின் பிரமாண பத்திரத்தையே அதிகமானோர் டவுன்லோடு செய்ததாக கருதப்பட்ட நிலையில், அவரை விட பல மடங்கு அதிகமாக கவனம் ஈர்த்துள்ளார் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த முறை சீமான், தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் களமிறங்கி இருக்கிறார். நட்சத்திர வேட்பாளர்களாக சீமான், அமமுகவின் தேர்போகி பாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ மாங்குடி மற்றும் தவெக பிரபு ஆகிய 4 பேர் நேருக்கு நேர் மோதுவதால், காரைக்குடி தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள உறுதிமொழி பத்திரங்களைப் பார்ப்பதில் பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் சொத்து மற்றும் பின்னணி விவரங்களை அறிந்துகொள்ள லட்சக்கணக்கானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை 22.55 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளனர்.
வேட்புமனு தாக்கலில் சீமான் தனது சொத்து மதிப்பு குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் அவருக்கு 5.11 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். தன் கையில் ரொக்கமாக ரூ. 50 ஆயிரமும், ரூ. 39.81 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், தனது பெயரில் ஹூண்டாய் வெர்னா காரும், 150 கிராம் தங்கமும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரங்கராஜபுரம் இந்தியன் வங்கியில் ரூ. 9,500, ஆக்ஸிஸ் வங்கி விருகம்பாக்கம் கிளையில் ரூ.72,000, அண்ணா நகர் எஸ்.பி.ஐ கிளையில் ரூ.7 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார். தன் பெயரில் அசையா சொத்து ஏதுமில்லை எனத் தெரிவித்துள்ள சீமான், எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ. 5.11 லட்சம் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் அவரது பிரமாண பத்திரத்தை சுமார் 3.50 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட விஜய்யின் பிரமாண பத்திரங்களை 3 லட்சத்து 18 ஆயிரம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் பிரமாண பத்திரங்களை சுமார் 30 ஆயிரம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். மொத்தமாக விஜய்யின் பிரமாண பத்திரங்களை 3.48 லட்சம் பேர் டவுன்லோடு செய்து பார்த்துள்ளனர்.
அவருக்கு அடுத்தபடியாக சென்னை கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலினின் பிரமாண பத்திரத்தை சுமார் 1.38 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications