Seeman: எனக்கே ஓட்டு இருக்காது! தமிழகத்தில் 1 கோடி பேர் வாக்குரிமையை இழப்பர்! சீமான் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் "எஸ்ஐஆர் நடவடிக்கையால் ஒரு கோடி பேர் வாக்குரிமையை இழப்பர்" என தெரிவித்துள்ளார். என் வாக்குரிமையே பறிபோகும் வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Seeman Protest

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 அல்லது 5 மாதங்களே உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என ஒன்று தமிழகத்தில் நடந்து வருகிறது. இதற்காக பிஎல்ஓ அதிகாரிகள் வீடு வீடாக வந்து விண்ணப்பங்களை வழங்கி வருகிறார்கள்.

அதிலும் இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணிகளை முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வரும் நிலையில் 6 கோடி வாக்காளர்கள் உள்ள தமிழகத்தில் எப்படி ஒரே மாதத்தில் அனைத்து வாக்காளர்களையும் சரி பார்த்துவிட முடியும் என்பதுதான் திமுக, கூட்டணி கட்சிகள், தவெக உள்ளிட்டவைகளின் கேள்வியாக இருக்கிறது.

இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு அதிமுக, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தவிர, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. நேற்றைய தினம் எஸ்ஐஆர் முறையை கண்டித்து தவெக சார்பில் தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக கொண்டு வருவது ஏன்?

மக்களுக்கு இருக்கும் கடைசி உரிமையை இந்த நாடு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை பாருங்கள். திடீரென போலி வாக்காளர்களை கண்டுபிடித்தது போல பேசுவது ஏன், ஈரோடு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா? ஒரே மாதத்தில் 6 கோடி வாக்காளர்களை எப்படி சரி பார்க்க முடியும்.

ஓராண்டு கால அவகாசம் எடுத்து சிறப்பு தீவிர திருத்த பணிகளை செய்திருக்க வேண்டும். இந்த நாட்டில் உள்ள வாக்காளர்கள் இது வரை தங்களுக்கான ஆட்சியாளர்களை தேர்வு செய்தார்கள். ஆனால் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் தங்களுக்கான வாக்காளர்களை தேர்வு செய்கிறார்கள். பெரிய பெரிய கட்சிகளில் அவர்களுக்கென்று கிளை இருக்கிறது. அவர்கள் போய் சரி செய்கிறார்கள். ஆனால் எங்களை போன்று வளர்ந்து வரும் கட்சியினர் எஸ்ஐஆரை எப்படி எதிர்கொள்ள முடியும்? என் படம், விஜய் படம் இருப்பதை பார்த்தால் நீக்கிவிடுவார்களே!

ஓக்கி புயலில் நடுக்கடலில் ஏராளமானோர் இறந்தனர். உயிரிழந்த சடலங்களை எடுத்துக் கொடுங்கள் என உறவினர்கள் போராட்டம் நடத்திய போது மத்திய அரசு என்ன செய்தது?

குறைந்தது ஒரு கோடி பேர் தங்களது வாக்குரிமையை இழப்பார்கள். பெரும்பாக்கத்தில் மட்டும் 27 ஆயிரம் பேருக்கு வாக்குரிமை இருக்காது. பீகாரில் 81 லட்சம் பேருக்கு வாக்கு செலுத்த தகுதி இருந்தும் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

கல்வி, சுகாதாரம், விரும்பிய மருத்துவக் கல்வியை கற்பது என இந்த நாட்டில் மட்டும் ஏன் தடையாகவே இருக்கிறது? நான் ஆலப்பாக்கத்தில் குடியிருந்தேன். அங்குதான் எனக்கு ஓட்டு உள்ளது. தற்போது நீலாங்கரை சென்றுவிட்டேன். இந்த பிஎல்ஓ அதிகாரிகள் ஆலப்பாக்கம் முகவரிக்குச் சென்று நான் இல்லாதால் என் பெயரை நீக்கிவிடுவார்கள்.

அது போல் யாராவது வேலைக்கு சென்றிருந்தால் அவர்களது பெயரும் நீக்கப்படும். எல்லா ஆவணங்களுடனும் ஆதாரை இணைக்கச் சொன்னார்கள். இப்போது அந்த ஆதாரை ஏற்க முடியாது என்கிறார்கள். இவ்வாறு சீமான் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+