"இழந்தது" போதும்.. அதிமுகவை விட்டுக் கொடுக்க முடியாது.. ஓபிஎஸ் வீட்டில் நிர்வாகிகள்.. பரபர வியூகம்!
சென்னை: அதிமுகவில் பல்வேறு பதவிகளை எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களுக்கு விட்டு கொடுத்தது போதும், இனி கட்சியை எடப்பாடி பழனிச்சாமிக்கு விட்டு கொடுக்க முடியாது என ஓபிஎஸ் பிடிவாதம் காட்டி வருகிறார்.
அதிமுக பொதுக் குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டியது குறித்து நேற்றைய தினம் மாவட்டச் செயலாளர்கள் முன்பு ஆலோசிக்கப்பட்டது.
அப்போது எம்ஜிஆர் மாளிகை வளாகத்தின் வெளியே எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் தனித்தனியே ஒற்றைத் தலைமை கோஷத்தை முழங்கினர்.

எடப்பாடி பழனிச்சாமி
நேற்றைய தினம் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக, அதாவது ஒற்றைத் தலைமையாக தேர்வு செய்து அதை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்மொழிய வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும்
இவ்வாறு இரு தரப்பினரும் மாறி மாறி பேசி வந்தனர். ஆனால் எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் இது குறித்து பேசாமல் மவுனம் காத்தனர். பின்னர் கூட்டம் நடந்து முடிந்தவுடன் ஓபிஎஸ் வேகமாக புறப்பட்டு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது அவர் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் ஆலோசனை நடத்தினார்.

2 ஆவது நாளாக ஆலோசனை
இந்த நிலையில் இன்றைய தினம் ஓபிஎஸ் வீட்டில் 2 ஆவது நாளாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தேனி, நெல்லை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஓபிஎஸ்ஸுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

ஒற்றைத் தலைமை
ஒற்றை தலைமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது ஓபிஎஸ் கறாராக இருக்கிறாராம். மேலும் ஏற்கெனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி, அதிமுக கொறடா, ராஜ்யசபா எம்பி சீட்டு உள்ளிட்டவைகள் எடப்பாடி தரப்பினரே ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தலைமை பொறுப்பை தான்தான் ஏற்க வேண்டும் என்பதால் ஓபிஎஸ் பக்காவாக வியூகம் வகுத்து வருகிறாராம்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications