திமுக கூட்டணியில் ஓ பன்னீர் செல்வம்? பழக்கூடை கொடுத்து முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம்(O Panneerselvam) இன்னும் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இந்நிலையில் தான் ஓ ப்னனீர் செல்வம் இன்று திடீரென்று முதல்வர் ஸ்டாலினுக்கு பழக்கூடை கொடுத்து சந்தித்துள்ளார். இதனால் ஓ பன்னீர் செல்வம் திமுக கூட்டணியில் இணைகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஓ பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற பெயரில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
2024 லோக்சபா தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் பாஜக தலைமையிலான கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்
இந்நிலையில் தான் தற்போது ஓ பன்னீர் செல்வம் தனித்து விடப்பட்டுள்ளார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி அதிமுகவுடன் பாஜக கைகோர்த்துள்ளது. இந்த கூட்டணியில் ஓ பன்னீர் செல்வம் இன்னும் இணையவில்லை.
இதற்கிடையே தான் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் பிற கட்சிகளின் சேர்ந்து வருகின்றனர். ஓ பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சியை தொடங்கினார். எம்ஜிஆர் அதிமுமக என்ற கட்சியை தொடங்கி உள்ளார். இது ஓ பன்னீர் செல்வத்துக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஸ்டாலினுடன் சந்திப்பு
இதனால் ஓ பன்னீர் செல்வம் தனித்து விடப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலினை, ஓ பன்னீர் செல்வம் திடீரென்று சந்தித்தார். ஓ பன்னீர் செல்வம் பழக்கூடையை ஸ்டாலினிடம் வழங்கினார்.
அவருடன் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் முன்னாள் எம்பி ரவீந்திரநாத் இருந்தார். அதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார். அதன்பிறகு ஸ்டாலினும், ஓ பன்னீர் செல்வமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சந்திப்பின் பின்னணி
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஓ பன்னீர் செல்வத்தை பொறுத்தவரை இன்னும் கூட்டணி அறிவிப்பை வெளியிடவில்லை. அதிமுகவில் இணைய மீண்டும் ஓ பன்னீர் செல்வம் விரும்புகிறார். ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை.
மேலும் பாஜக தனக்கு உதவும் என்று ஓ பன்னீர் செல்வம் நினைத்தார். ஆனால் பாஜகவும் ஓ பன்னீர் செல்வத்துக்கு சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் ஓ பன்னீர் செல்வம் கடும் அதிருப்தியில் உள்ளார்.
திமுக கூட்டணியில் ஓபிஎஸ்?
இதற்கிடையே தான் ஓ பன்னீர் செல்வம் விரைவில் திமுக கூட்டணியில் இணையலாம் என்றும், திமுக தலைமை ஓ பன்னீர் செல்வத்துடன் தொலைபேசியில் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்படியான சூழலில் தான் ஓ பன்னீர் செல்வம் இன்று முதல்வர் ஸ்டாலினை திடீரென்று சந்தித்து பேசி உள்ளார். இதனால் ஓ பன்னீர் செல்வம் திமுக கூட்டணியில் இணைகிறாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதோடு ஓ பன்னீர் செல்வம் திமுக கூட்டணியில் இணைவது என்றால் எந்த கட்சியின் பெயரில் போட்டியிடுவார்? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற பெயரில் சுயேச்சை சின்னத்தில் களமிறங்குவாரா? இல்லாவிட்டால் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் களம் காண்பாரா? என்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications