தங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி!
அதிமுகவுக்குள் தங்க தமிழ்செல்வன் இணைய ஓபிஎஸ் முட்டுக்கட்டை போடுகிறாராம்
Recommended Video
சென்னை: தங்க தமிழ்செல்வனா.. ம்ஹூம்.. கூடவே கூடாது. என்று ஒத்தைக்காலில் நிற்கிறாராம் ஓபிஎஸ்.. இதுதான் அதிமுகவின் இப்போதைய ஹாட் டாபிக்!
அமமுகவில் விரிசல் என்றதுமே, தங்க தமிழ்செல்வன் அதிமுகவுக்குள் செல்ல போகிறார் என்று சொல்லப்பட்டது.
அதே சமயம், செந்தில் பாலாஜி திமுகவில் இருப்பதாலும், அவருடன் தங்க தமிழ்செல்வனுக்கு நல்ல நெருக்கம் இருப்பதாலும் எப்படியும் திமுகவுக்குதான் தாவ போகிறார் என்றும் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதற்கு எங்கள் பக்கம்தான் தங்க தமிழ்செல்வன் வரப்போகிறார் என்று திவாகரன் தரப்பு கூறியுள்ளது.

தேனி
இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் கூப்பிட்டு கொண்டு இருக்கும் நிலையில், ஓபிஎஸ் மட்டும் செம டென்ஷனில் இருக்கிறாராம். தன்னை தேனியில் எப்படியெல்லாம் தங்க தமிழ்செல்வன் எதிர்த்தார் என்பதை அதிமுக தரப்பிடம் எடுத்து சொன்னாராம்.

முட்டுக்கட்டை
தன் மகனை பற்றியெல்லாம் தொகுதிக்குள் எதைஎதையோ சொல்லி அசிங்கப்படுத்தியதாகவும், பதவி ஆசையில் நான் பாஜகவில் இணைய போவதாகவும், அவர்களிடம் சரணடைந்ததாகவும் இப்படியெல்லாம் என்னை பற்றி கேவலப்படுத்தியவர் தங்க தமிழ்செல்வன்தான். அதனால் அதிமுகவில் இணைத்துக்கொள்ள கூடாது என்று முட்டுக்கட்டை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொறுப்பு
ஒருவேளை கட்சியின் நன்மைக்காக தங்க தமிழ்செல்வனை உள்ளே கொண்டு வருவதாக இருந்தால், அதற்கும் ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம் ஓபிஎஸ். மாநில அளவில் என்ன பொறுப்பு வேண்டுமானாலும் கொடுத்து கொள்ளுங்கள், ஆனால் தொகுதி அளவில் அவரால் எங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்க கூடாது என்பதுதானாம் அது.

எடப்பாடி தரப்பு
ஏற்கனவே தேனியில் முதல்வர் பழனிசாமியாலேயே ஓபிஎஸ் செல்வாக்கை முறியடிக்கவில்லை. மேலும் புகைச்சலும் அதிகமாகி வருகிறது. இந்த சமயத்தில் தங்க தமிழ்செல்வனை கட்சிக்குள் கொண்டு வந்து, ஓபிஎஸ்-ன் செல்வாக்கை எடப்பாடி தகர்க்க முயலவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

சிக்கல்
மற்றொரு பக்கம், ஓபிஎஸ்ஸை பகைத்து கொண்டால், பாஜக தரப்பு மூலம் பிரஷர் கொண்டு வந்து விட்டுவிடுவாரோ என்ற கலக்கமும் எடப்பாடிக்கு எழுந்துள்ளாம். அதனால் தங்க தமிழ்செல்வன் அதிமுகவுக்கு வந்தாலும் பிரச்சனை, வராவிட்டாவிலும் சிக்கல் என்ற நிலைமை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications