23 தீர்மானங்களை பார்த்ததும்.. திடீரென "கூலான" ஓபிஎஸ்! சட்டுனு மனம் மாறி.. ஏன் "இந்த" முடிவு?
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அனுமதி தரவில்லை என்று தகவல் வெளியான நிலையில், அந்த தீர்மானங்களுக்கு அவர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
அதிமுக பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. அதிமுக பொதுக்குழு நடக்கும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபம் முழுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மொத்த பகுதியும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளது.
உள்ளே, வெளியே என்று சேர்த்து மொத்தம் 2 ஆயிரம் போலீசார் அங்கே குவிக்கப்பட்டு உள்ளனர். உள்ளே செல்லும் எல்லோரையும் மிக தீவிரமாக சோதனை செய்த பின்பே போலீசார் அனுமதித்து வருகின்றனர்.

பொதுக்குழு
இந்த நிலையில் நாளை பொதுக்குழு கூட உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2505 பேரிடம் ஒப்புதல் கடிதம் பெற்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இவர்கள் பொதுக்குழுவில் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. வெறும் 120 பேர் மட்டுமே இதுவரை ஒப்புதல் கடிதம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பெரும்பான்மை உறுப்பினர்கள் பொதுக்குழுவில் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளனர்.

தொண்டர்கள் வர கூடாது
இந்த நிலையில் பொதுக்குழுவிற்கு தொண்டர்கள் வர கூடாது என்று ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளார் என்று கூறப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொள்ள கூடாது. பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை நிராகரிக்க வேண்டும். கூட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஓபிஎஸ் அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் என்று செய்திகளில் வந்தது. ஆனால் அந்த கடிதம் உண்மை இல்லை, செய்தியில் உண்மை இல்லை என்று ஓபிஎஸ் தரப்பு மறுத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி இன்னொரு பக்கம் ஓபிஎஸ்ஸுக்கு எழுதிய கடிதத்தில்.. பொதுக்குழு கண்டிப்பாக நடக்கும். எல்லோரும் பொதுக்குழுவிற்கு வாருங்கள். ஓபிஎஸ் பொதுக்குழுவிற்கு வர வேண்டும். பிரச்சனைகளை அங்குதான் பேசி தீர்க்க வேண்டும். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை நிலவவில்லை. எல்லாம் சட்டப்படி நடக்கும், என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் .

புதிய திருப்பம்
இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அனுமதி தரவில்லை என்று தகவல் வெளியானது. அதிமுக பொதுக்குழு நாளை கூட உள்ள நிலையில் தீர்மானங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து அவசியம் என்ற நிலையில் ஓபிஎஸ் கையெழுத்து போட மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள செய்தியில் 23 தீர்மானங்களையும் ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தீர்மானம் நிறைவேறுமா?
அதன்படி இவரிடம் 23 தீர்மானங்கள் அடங்கிய தீர்மான பேப்பர் வழங்கப்பட்டுள்ளது. இந்த 23 தீர்மானங்களில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்குவது தொடர்பான தீர்மானம் இடம்பெறவில்லை. இதனால் கூலான ஓபிஎஸ் அந்த தீர்மானங்களுக்கு அனுமதி அளித்துள்ளார். அதைத்தவிர வேறு அஜெண்டாவோ, தலைமையை மாற்றும் அஜெண்டாவோ கொண்டுவரக்கூடாது என்று கூறி தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். தீர்மான குழு கூட்டம் மூலம் இந்த 23 தீர்மானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 23 தீர்மானங்களில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிங்களை நீக்குவது தொடர்பான தீர்மானம் இடம்பெறாத நிலையில் அவர் தனி தீர்மானமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications