கிளம்பி வாங்க.. தேதி குறித்த ஓபிஎஸ்.. எடப்பாடிக்கு ‘செக்’ பிளான்.. மா.செக்கள் கூட்டத்திற்கு அழைப்பு!
சென்னை: சென்னையில் வரும் ஜூலை 1ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது.
அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டிற்குச் சென்றதால் அதிமுகவை கைப்பற்ற முடியாமல் போன ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கேற்ப சமீபத்தில் டிடிவி தினகரனும், ஓ. பன்னீர்செல்வமும் சென்னையில் சந்தித்துப் பேசினர்.

அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டு திருமண நிகழ்வில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ்ஸும் கூடுதல் நெருக்கம் காட்டினர். ஓபிஎஸ் விரைவில் சசிகலாவையும் சந்திப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் அணியினர் விரைவில் கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்திய நிலையில் அடுத்தகட்டமாக கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், மேற்கு மண்டல மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் இன்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, வரும் ஜூலை 1ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில், சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் 01-07-2023 சனிக்கிழமை காலை 10.31 மணிக்கு நடைபெறும்.
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications