பிளாட்பார்ம் கூட கிடையாது! எடப்பாடியால் ஓ பன்னீர்செல்வத்திற்கு நேர்ந்த நிலை! சீக்ரெட்டை சொன்ன புள்ளி
கொங்கு மண்டலம் எடப்பாடியை அங்கீகரித்துவிட்டது, சமுதாயத்தில் 3ல் ஒரு பகுதியினர் எடப்பாடியை கொண்டாடுகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓ பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அதிமுகவில் அவருக்கு இடம் இல்லை, அதிமுகவில் பிளாட் பார்மில் நிற்க கூட அவருக்கு இடம் இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக கே. எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு நிறுத்திய வேட்பாளர் செந்தில் வாபஸ் வாங்கிய நிலையில், எடப்பாடி தரப்பு மட்டும் வேட்பாளரை இரட்டை இலை சின்னத்திற்கு கீழ் நிறுத்துகிறது. இதனால் எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் ஆகி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த வேட்பாளருக்கு பாஜகவும் ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாக என்று மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி
அவர் தனது பேட்டியில், ஓ பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அதிமுகவில் அவருக்கு இடம் இல்லை. அதிமுகவில் பிளாட் பார்மில் நிற்க கூட அவருக்கு இடம் இல்லை. அவரின் இடத்தை தீர்மானிப்பது எடப்பாடி பழனிசாமின் கையில் இருக்கிறது. எடப்பாடி தன்னிடம் இடத்தை கொடுப்பார் என்று ஓ பன்னீர்செல்வம் நினைத்தார். ஆனால் எடப்பாடி அதை எல்லாம்கொடுக்கவில்லை. ஓ பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது தனக்கான களத்தை அவர் அமைத்துக்கொள்ளவில்லை. எடப்பாடி நினைத்தால் கொங்கில் வெற்றிபெற முடியும். அவர் கொங்கில் தனக்கான களத்தை ஏற்படுத்தவில்லை. அவர் நினைத்தால் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற முடியும், 50 சட்டசபை உறுப்பினர்களை பெற முடியும். எடப்பாடி கொங்கில் மோனோபாலியாக வெற்றிபெற முடியும். கொங்கு மண்டலம் அவரை அங்கீகரித்துவிட்டது.

சமுதாய மோதல்
சமுதாயத்தில் 3ல் ஒரு பகுதி எடப்பாடியை கொண்டாடுகிறார்கள். திண்டுக்கல் வரை நிர்வாகிகள், மக்கள் எடப்பாடியை கொண்டாடுகிறார்கள். மற்றபடி ஓ பன்னீர்செல்வத்திற்கு தென் மண்டலத்தில் ஆதரவு இல்லை. அவருக்கு மக்கள் சப்போர்ட் இருப்பதை அவரை நிரூபிக்க முடியவில்லை. முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த சக மாஜி அமைச்சர்களே ஓ பன்னீர்செல்வத்தை ஆதரிக்கவில்லை. திண்டுக்கல் சீனிவாசன் முக்குலத்தோர் பிரிவை சேர்ந்தவர். அவர் ஓ பன்னீர்செல்வத்தை எலி என்கிறார். அதிமுக மோதல் ஒரு யானைக்கும், எலிக்குமான மோதல் என்கிறார்.

நத்தம் விஸ்வநாதன்
நத்தம் விஸ்வநாதனும் எடப்பாடி பக்கம் இருக்கிறார். ஆர்.பி உதயகுமாரை ஓ பன்னீர்செல்வத்தால் தக்க வைக்க முடியவில்லை. செல்லூர் ராஜு ரஜினி ரசிகர் மன்ற தலைவர். அவரும் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர். அவரையும் கூட ஓ பன்னீர்செல்வத்தால் தக்க வைக்க முடியவில்லை. இதனால் மதுரை, திண்டுக்கல் போய்விட்டது. புதுக்கோட்டையில் விஜயபாஸ்கரும் கூட ஓ பன்னீர்செல்வத்தை எதிர்க்கிறார். முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த யாரும் ஓ பன்னீர்செல்வம் பக்கம் இல்லை. ஆனால் அதன்பின் வந்த எடப்பாடி வேலுமணி, தங்கமணி என்று மொத்தமாக கொங்கு நிர்வாகிகளை தனது தளபதியாக்கி இருக்கிறார்.

தளபதி
கொங்கு மண்டல நிர்வாகிகள் மட்டுமின்றி தென் மண்டல நிர்வாகிகளையும் எடப்பாடி தன் பக்கம் இழுத்துள்ளார். ஆனால் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடிக்கு முன்பே முதல்வராக இருந்தும் கூட எடப்பாடி மாதிரி செயல்பட முடியவில்லை. ஓ பன்னீர்செல்வத்தால் அப்போது இருந்த அமைச்சர்களை கட்டுப்படுத்தவே இல்லை. ஜெயலலிதா, சசிகலா அதிகாரத்தில் இருந்த போதே 3வது இடத்தில் இருந்தவர் ஓ பன்னீர்செல்வம். ஆனால் ஜெயலலிதா இறந்த பின் சசிகலாவை ஆதரிக்காமல் ஓ பன்னீர்செல்வம் வெளியேறினார். அவரால் எம்எல்ஏக்களையும் கையில் வைத்துக்கொள்ள முடியவில்லை, தனது கட்சியினரையும் கையில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதன்பின் வந்த எடப்பாடி பழனிசாமி மொத்த கட்சியையும் கைப்பற்றிவிட்டார், என்று பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக்












Click it and Unblock the Notifications