பிரீஸ் ஹோட்டலில் சீறிய ஓபிஎஸ்.. சசிகலாவை கூப்பிடலாம்.. அதிரடியா முடிவெடுத்துட்டாரே.. பெரிய ட்விஸ்ட்
சென்னை: நேற்று தனது ஆதரவு அதிமுக நிர்வாகிகளுடன் முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய ஓ பன்னீர்செல்வம், சில முக்கியமான முடிவுகளையும் அதில் எடுத்துள்ளாராம்.
வரிசையாக அரசியல் ரீதியாக கடந்த சில மாதங்களில் ஓ பன்னீர்செல்வம் பல தோல்விகளை சந்தித்துவிட்டார். அதிமுக பொதுக்குழுவில் அவமதிக்கப்பட்டது. பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது. அதன்பின் இரட்டை இலை சின்ன வழக்கில் தோல்வி அடைந்தது. பின்னர் பொதுக்குழு வழக்கில் தோல்வி அடைந்தது என்று ஓ பன்னீர்செல்வம் தொட்டதெல்லாம் கடந்த சில மாதங்களாக தோல்வியில்தான் முடிந்துள்ளது.

அரசியல் வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்விகளை சந்தித்து வருகிறார் ஓ பன்னீர்செல்வம். பொதுவாக சமாதானமாக போய் பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க போய் தற்போது இருந்ததும் போய் இல்லாமல் அமர்ந்து இருக்கிறார்.
ஓ பன்னீர்செல்வத்திற்கு மேலும் ஷாக் கொடுக்கும் விதமாக பொதுக்குழு தீர்மான வழக்கிலும் ஓ பன்னீர்செல்வம் நேற்று தோல்வி அடைந்தார். அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கி இருந்தது. இப்போது உட்கட்சி தேர்தலில் எதிர்ப்பு இன்றி எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவின் பொதுச்செயலர் ஆகிவிட்டார்.
தூக்கி எறிவோம் :
இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்வது மட்டுமே பாக்கி. இப்படிப்பட்ட நிலையில் நேற்று திருச்சி பிரீஸ் ஹோட்டலில் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். திருச்சியில் வருகிற 24-ந் தேதி முப்பெரும் விழா மாநாடு நடத்த இருக்கிறார் ஓபிஎஸ். இதை பற்றி ஆலோசனை செய்ய பிரீஸ் ஹோட்டலில் அவர்கள் கூடினார்கள். இதில் மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மருது அழகுராஜ் ஆகியோர் இருந்தனர்.
இந்த கூட்டத்தில் பேசிய ஓ பன்னீர்செல்வம்.. அதிமுகவில் என்னை அவமதித்து உள்ளனர். எடப்பாடி ஆட்களை வைத்து என்னை தினமும் அவமதிப்பு செய்து அவமானம் செய்கிறார்கள் . இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லும் காலம் வரும். அதிமுகவை கயவர்கள் கையில் இருந்து மீட்டு எடுப்போம். அதிமுகவை கைப்பற்ற பார்க்கும் நபர்களை நாம் விரைவில் தூக்கி எறிவோம். திருச்சியில் நாம் மாநாடு செய்ய போகும் நாள் மிக முக்கியமான நாள். அரசியலில் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்று ஓ பன்னீர்செல்வம் பேசி இருக்கிறார்.

அழைப்போம்:
இதே கூட்டத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை பொதுக்கூட்டத்திற்கு அழைக்கலாம். அவர்களுக்கு முறையாக நேரில் சென்று அழைப்பு விடுப்போம் என்றும் ஓ பன்னீர்செல்வம் பேசி இருக்கிறாராம். விரைவில் இவர் அழைப்பிதழ் கொடுக்கும் நிகழ்வு நடக்கும் என்கிறார்கள்.
ஓபிஎஸ் பேட்டி:
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், சட்டம் எங்கள் பக்கம் நிற்கிறது. சட்டப்படி நாங்கள் வெல்வோம். அதிமுகவை மீட்போம். நாங்கள்தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிப்போம். வருகிற 24-ந் தேதி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடக்க உள்ளது. அதோடு அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த முப்பெரும் விழாவில் அதிமுகவை மீட்போம். சசிகலாவை இதற்காக அழைப்பேனா என்பதை பொறுத்திருந்து பாருங்கள், என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications