நொந்து நூடுல்ஸான "தலைகள்".. ஓபிஎஸ் அணியில் விழுந்த "குண்டு".. அப்படியே வெளியேறும் திமிங்கலங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தோல்வி அடைந்ததும் என்ன நடக்கும் என்று பல அரசியல் வல்லுனர்கள் கணித்து இருந்தார்களோ அதே சம்பவம்தான் தற்போது ஓ பன்னீர்செல்வம் கேம்பில் நடக்க தொடங்கி உள்ளது.

அதிமுகவில் தொட்டதெல்லாம் தோல்வி.. பட்டதெல்லாம் காயம் என்ற கடும் விரக்தியோடு சுற்றிக்கொண்டு இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். முதலில் கட்சி நிர்வாகிகள் சப்போர்ட் இல்லாமல் போனது, பின்னர் பொதுக்குழுவை நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.

அந்த பொதுக்குழுவில் அவமதிக்கப்பட்டது. பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது. அதன்பின் இரட்டை இலை சின்ன வழக்கில் தோல்வி அடைந்தது. பின்னர் பொதுக்குழு வழக்கில் தோல்வி அடைந்தது என்று ஓ பன்னீர்செல்வம் தொட்டதெல்லாம் கடந்த சில மாதங்களாக தோல்வியில்தான் முடிந்துள்ளது.

பொதுக்குழு தீர்மானம்

பொதுக்குழு தீர்மானம்

முத்தாய்ப்பாக பொதுக்குழு தீர்மான வழக்கிலும் ஓ பன்னீர்செல்வம் நேற்று தோல்வி அடைந்தார். அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த நிலையில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

பொதுச்செயலாளர்

பொதுச்செயலாளர்

அதேபோல் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிமுகவில் பொதுக்குழுவிற்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது தெளிவாகி உள்ளது. இந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இன்றே அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதாவது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிமுக தேர்தல் குழு நிர்வாகிகள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

தீர்ப்பு

தீர்ப்பு

எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு வந்ததை அடுத்து உடனடியாக மேல் முறையீடு செய்துள்ளார் ஓபிஎஸ். நாளை இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. இன்று வழக்கு விசாரணைக்கு வரவில்லை. சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டில் ஓபிஎஸ்சுக்கு சாதகமான எதுவும் நடக்கவில்லை எனில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் ஓபிஎஸ். அந்த மேல்முறையீட்டில் நிச்சயம் ஓபிஎஸ்சுக்கு சாதகமான தீர்ப்பை பெற முடியாது என்றெல்லாம் இப்போதே கவலைப்பட தொடங்கிவிட்டனர். ஓபிஎஸ் அணியில் இந்த தீர்ப்பு பெரிய குண்டு போல விழுந்துள்ளது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் இவருக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் அதன்பின் வேறு எங்கும் தீர்வு கிடைக்கும் வாய்ப்புகளும் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று கூறிவிட்டதால் இனி பொதுக்குழு தீர்மான வழக்கிலும் அதே போன்ற தீர்மானத்தைதான் உச்ச நீதிமன்றம் வழங்க வாய்ப்புகள் உள்ளன. சட்ட போரட்டத்தில் இதில் ஓ பன்னீர்செல்வம் தீர்வு பெற்று வெல்வது என்பது இனி கடினம்தான். ஓபிஎஸ்சை நம்பியுள்ள அவரது ஆதரவாளர்கள்.

 நொந்துவிட்டனர்

நொந்துவிட்டனர்

மேலும் , வழக்கு, விசாரணை, மேல்முறையீடு என இப்படியே நம்முடைய அரசியல் கழிந்து போனால் நமக்கான இடம் அதிமுகவில் இல்லாமலே போய்விடுமே, ஒரே சலிப்பாக இருக்கிறது என்று நொந்து போயிருக்கிறார்கள். உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் என்ன மாதிரி தீர்ப்பு கிடைக்கும் என பார்த்து ஒரு முடிவை நாம் எடுத்தாக வேண்டும் , தொடர்ந்து ஓபிஎஸ்சோடு பயணிக்க வேண்டுமா? அல்லது எடப்பாடி தலைமையை ஏற்றுக் கொள்வோமா? என்கிற அளவுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வரும் நாட்களில் ஓபிஎஸ் டீமில் இருக்கும் சில திமிங்கலங்கள் எடப்பாடி அணிக்கு தாவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+