120Bல் உள்ளே போடுங்க! எடப்பாடியை விளாசிய எம்எல்ஏக்கள்! தனியாளாக ஓபிஎஸ் தந்த ரியாக்சன் இருக்கே.. ப்பா
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார்.
நேற்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை.
துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹ 10 லட்சமும் வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஸ்டாலின்
இதையடுத்து இன்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து பேசுகையில், கேட்போரை ரத்தம் உறையவைக்கும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டதாக கூறியது உண்மைக்கு மாறானது.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிமுக அரசின் ஆணவத்திற்கு 13 உயிர்கள் பலியாகின. என்ன ஒரு கொடுமையான சம்பவம் இது.

உடல் நடுங்கும்
அதை இப்போது நினைத்தாலும் என் உடல் நடுங்குகிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்பே நான் சொன்ன உறுதிமொழி அது, தவறு செய்தவர்கள் எல்லோரும் தண்டிக்கப்படுவார்கள். யார் யார் குற்றவாளிகளோ அவர்கள் எல்லாம் கண்டிப்பாக கூண்டில் ஏற்றப்படுவார்கள். தண்டிக்கப்படுவார்கள். அதைதான் இந்த உரையில் தெரிவித்துக்கொள்கிறேன். எடப்பாடி இதில் முழுக்க முழுக்க பொய்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
கிராமத்து பக்கம் கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் குடித்துவிட்டேன் என்று கூறும் பழமொழியை விட மிகப்பெரிய பொய் கூறியுள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதன்பின் பல்வேறு திமுக எம்எல்ஏக்கள் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை இதேபோல் எடப்பாடியை விமர்சனம் செய்து பேசினார். அதில், துரோகம், துரோகம், துரோகத்தை தவறிய எதுவும் தெரியாதவர்கள் இப்போது வள்ளுவர் கோட்டத்தில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

துரோகம்
அம்மாவிற்கு துரோகம், மக்களுக்கு துரோகம் என்று உங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. கொடநாட்டில் கூட நீங்கள் துரோகம் செய்தீர்கள்தானே. அதை கூட முதல்வர் ஸ்டாலின் தானே இப்போது விசாரிக்கிறார். அவர்தான் நீதி பெற்றுத்தர போகிறார். தூத்துக்குடி மக்கள் மட்டுமின்றி மொத்தமாக காவல்துறை சார்பாக கேட்கிறேன். எடப்பாடி மீது 120 பி சட்ட பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .

ஓபிஎஸ் ரியாக்சன்
அப்போது எதிர்க்கட்சி வரிசையில் ஓ பன்னீர்செல்வம் அமர்ந்து இருந்தார். அதிமுக எம்எல்ஏக்களில் எடப்பாடி ஆதரவாளர்கள் இன்று அவைக்கு வரவில்லை. இதனால் ஓபிஎஸ் மட்டும் தனியாக இருந்தார். கொடநாடு பற்றி கேட்டதும் ஓ பன்னீர்செல்வம் லேசாக சிரித்தார். அதேபோல் எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று அழைத்ததும் ஓ பன்னீர்செல்வம் லேசாக சிரித்தார்.. அவர் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது,
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications