மிதக்கும் தென்மாவட்டங்கள்.. மீட்பு, நிவாரண நடவடிக்கை.. அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ஓபிஎஸ்
சென்னை: கன மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது: இலங்கை கடற் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல், இன்னும் மழைப் பொழிவு இருக்கும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் தென் மாவட்ட மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் ஊத்து என்ற இடத்தில் 54 செ.மீ. மழையும், அம்பாசமுத்திரத்தில் 37 செ.மீ. மழையும், கனடியன் மற்றும் காக்காச்சியில் தலா 35 செ.மீ. மழையும், மாஞ்சோலையில் 32 செ.மீ. மழையும், நாலுமுக்கில் 31 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது.
இதன் காரணமாக திருநெல்வேலி சந்திப்பு, ரயில் நிலையம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு ஒரு இலட்சம் கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. இதேபோன்று, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் 37 செ.மீ. மழை பெய்துள்ளது. இது தவிர, ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளதன் காரணமாக, L160 பாலங்களில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததன் காரணமாக மக்களின் உடைமைகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் கால்வாய்களை தூர்வாரததும், ஆக்கிரமிப்புகளும்தான் காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருச்சுழி, காளையார்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக நெற்பயிர் மற்றும் இதர பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. திருச்சி, திருப்பூர், ராமநாதபுரம், பொள்ளாச்சி போன்ற பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மீட்பு பணி மற்றும் நிவாரணப் பணிகள் மந்த கதியில் நடப்பதாக தகவல்கள் வருகின்றன.
தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைப் பொழிவிற்கான வாய்ப்பு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், எங்கெங்கெல்லாம் மேலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதைக் கண்டறிந்து அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், குடிசைகள், வீடுகள், வீடுகளில் உள்ள உடமைகள், வாகனங்கள் என எதுவாக இருந்தாலும் சேதத்திற்கு ஏற்ப நிவாரணத் தொகை வழங்கவும், பயிர்களுக்கு இரட்டிப்பு இழப்பீட்டுத் தொகை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கவும், ஆங்காங்கே குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும். போக்குவரத்தை சரி செய்யவும் போர்க்கால அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications