பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களில் நிலவும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வேறு பல்கலைக்கழகங்களின்கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை, பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் பற்றாக்குறை என்ற அவல நிலை கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நீடித்து வருகின்ற நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் வேறு பல்கலைக்கழகங்களின்கீழ் பணியாற்றும் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்படும் சூழ்நிலையை தி.மு.க. அரசு உருவாக்கியுள்ளது.

உயர்கல்வியை எல்லோரும் அடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்டது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின் மூலம் லட்சக்கணக்கான ஏழை, எளிய மாணவ, மாணவியர் பட்டம் பெற்றுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் நூறு பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், வெறும் 37 பேராசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாகவும், 43 உதவிப் பேராசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும், ஏற்கெனவே ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்ற நிலையில், இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் வேறு பல்கலைக்கழகங்களின்கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு மாற்றப்படுவதாகவும் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இப்படிப்பட்ட மாறுதல் பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது என்றும், இந்த நிலை நீடித்தால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து ஆகும் சூழ்நிலை உருவாகும் என்றும், இதன்மூலம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணிகள், தேர்வுப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை காக்கும் வகையில், அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களை வேறு பல்கலைக்கழகங்களின்கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் உள்ளிருப்புப் பேராட்டத்தை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இதைத் தடுத்து நிறுத்த தி.மு.க. அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதல்வர் ஸ்டாலின் உடனடியாக கவனம் செலுத்தி, தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வேறு பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தி பல்கலைக்கழக அங்கீகாரத்தைக் காக்கவும், பல்கலைக்கழகங்களில் நிலவும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications