ஓ பன்னீசெல்வத்திற்கு திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி? இரண்டு பெரிய ஆஃபர் தந்த ஸ்டாலின்?
சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற உச்சபட்ச அதிகாரத்தில் இருந்தவர் ஓ பன்னீர்செல்வம். இரட்டை தலைமைகளில் ஒருவராக இருந்தார். தமிழ்நாட்டில் மூன்று முறை முதல்வராக இருந்தார். ஆனால் இரட்டை தலைமை பிரச்சனையால் ஓரம்கட்டப்பட்ட அவரை, திரும்பவும் அதிமுகவில் சேர எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கவில்லை. இதனால் வேறுவழியின்றி திமுகவில் ஓ பன்னீர்செல்வம் இணைந்தார். அவருக்கு திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி கிடைக்கலாம் என்றும், பன்னீர்செல்வம் உள்பட திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் நிர்வாகிகள் மூன்று பேருக்கு தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியல் கவுண்டமனி ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால், அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்பது போல் எதிர்பாராத திருப்பங்கள் நடக்கும். நேற்று வரை திட்டிக்கொண்டவர்கள், குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டவர்கள் ஒன்றாக மாறிவிடுவார்கள். அப்படித்ததான் ஒரு காலத்தில் அதிமுகவின் 'உச்சபட்ச அதிகாரம்' கொண்ட ஒருங்கிணைப்பாளராகவும், ஜெயலலிதா என்ற ஆளுமைக்கு அடுத்தபடியாக அதிமுக சார்பில் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணம் இன்று திசைமாறி திமுகவில் வந்து நின்றுள்ளது.

சிரிப்பார்கள்
ஓ பன்னீர்செல்வம் திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் வாசலை மிதிக்க போகிறார் என்றோ, அல்லது ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினையும் தலைவராக ஏற்றுக்கொண்டு அரசியல் செய்ய போகிறார் என்றோ 10 வருடம் முன்பு கூறியிருந்தால் சிரிப்பார்கள்.. ஆனால் இன்று அப்படியே தலைகீழ் நிலைமை.
ஒற்றை தலைமை பிரச்சனை
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என ஆளுமைகளால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சிக்குள் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஓ பன்னீர்சல்வம். எடப்பாடி பழனிசாமியுடனான அதிகாரப் போட்டியில் மெல்ல மெல்லத் தன் பிடியை இழந்தார். 'ஒற்றைத் தலைமை' என்ற முழக்கம் எழுந்தபோது, அது ஓபிஎஸ் என்ற பிம்பத்தை அதிமுகவிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சி வெற்றிகரமாக நடந்தது.
எடப்பாடி பழனிசாமி பிடிவாதம்
சட்டப் போராட்டங்கள், பொதுக்குழு மோதல்கள் என அனைத்தையும் ஓ பன்னீர்செல்வம் நடத்தி பார்த்தார். எதுவும் கைகூடவில்லை. நிர்வாகிகளில் 95 சதவீதம் எடப்பாடி பக்கம் என்பதால், அப்படியே நிலைமை மாறியது. ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் "சமரசம்" ஏற்படும் என்றே நம்பினார் ஆனால், எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருந்தார். தன்னை எதிர்த்த யாரையும் அரவணைக்கும் ஜெயலலிதாவின் பாணியைப் பின்பற்றாமல், ஓபிஎஸ்-ஸை மீண்டும் கட்சிக்குள் சேர்க்கவே முடியாது என்பதில் இபிஎஸ் காட்டிய உறுதியால், ஓபிஎஸ் தனித்துவிடப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக பிரிந்து சென்றனர். இதனால வேறுவழியின்றி தன் அரசியல் வாழ்வைத் தக்கவைக்க வேண்டிய நெருக்கடியில், கடினமான முடிவை எடுத்தார்.
திமுகவில் தஞ்சம்
"அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை" என்ற தத்துவத்தின்படி, தன் பரம எதிரியாகக் கருதிய திமுகவில் நேற்று ஓ பன்னீர்செல்வம் இணைந்தார. இது ஒரு சாதாரண கட்சித் தாவல் அல்ல என்று கூற முடியாது. ஏனெனில் ஒரு முன்னாள் முதலமைச்சர், அதிமுகவின் அடையாளமாக இருந்தவர்.. தன் கொள்கை எதிரியிடம் தஞ்சம் புகுந்திருப்பது தமிழக அரசியலில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் பதவியு
தற்போது வெளியாகி வரும் தகவல்களின்படி, திமுகவில் ஓ பனனீர்செல்வத்திற்கு 'துணைப் பொதுச்செயலாளர்' என்ற முக்கியப் பதவி வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.. இது வெறும் பதவி மட்டுமல்ல, தென் தமிழகத்தில் அதிமுகவின் வாக்கு வங்கியைச் சிதைக்க திமுக கையிலெடுத்திருக்கும் ஒரு முக்கிய ஆயுதமாக பார்க்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். ஓபிஎஸ் மட்டுமல்லாது அவருடன் வந்த முக்கிய நிர்வாகிகள் மூவருக்கும் வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற பேச்சு அறிவாலய வட்டாரங்களில் அடிபடுகிறது. ஓ பன்னீர்செல்வம் மீண்டும் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாக்கம் எப்படி இருக்கும்
மூன்று முறை முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு இப்போது 75 வயது ஆகிறது. இன்று தன் அரசியல் இருப்புக்காக திமுகவில் சாதாரண நிர்வாகியாகத் தொடங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிமுகவில் ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்ட விதம் அவருக்கு ஒரு அனுதாபத்தைத் தந்திருக்கலாம், ஆனால் திமுகவில் அவர் இணைந்திருப்பது அவரது ஆதரவாளர்களிடையே எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சட்டசபை தேர்தலில் தான் தெரியவரும்.
-
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!












Click it and Unblock the Notifications