பாஜக சொன்ன சீட்டுக்கு ஒப்புக்கொள்ளாத ஓபிஎஸ்.. நாளை மாசெக்கள் கூட்டத்திற்கு பின் முக்கிய அறிவிப்பாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக உடன் இன்று மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இழுபறி நீடிக்கிறது. பாஜக - ஓபிஎஸ் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதோடு, அதிமுக பெயர், சின்னம், கொடியையும் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்ற உத்தரவின் காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தற்போது இயங்கி வருகிறார். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

O Panneerselvam not happy with bjp in seat sharing talks


மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கு நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தயார்படுத்துவது, தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக தனது ஆதரவாளர்களை அண்மையில் ஆலோசித்த ஓபிஎஸ், பாஜகவுடன் தான் கூட்டணி என உறுதியாகத் தெரிவித்தார்.

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்: பாஜகவை முழுமையாக ஆதரிப்பதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக சிறப்பான ஆட்சியை தந்துள்ளது என்றும், மீண்டும் மோடியே பிரதமராக வரவேண்டும் என்றும் கூறி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் அணி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களையும் பெற்றார் ஓபிஎஸ்.

அதைத்தொடர்ந்து, கடந்த மார்ச் 10ஆம் தேதி பாஜக குழுவினர், ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து மறுநாளும் பாஜக குழுவினரைச் சந்தித்துப் பேசினார் ஓபிஎஸ். ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜிகே வாசன் உள்ளிட்டோரோடு பாஜகவினர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஓபிஎஸ்ஸுக்கு எத்தனை சீட்?: எனினும், ஓபிஎஸ்ஸுக்கு எத்தனை சீட் என்பது இன்னும் உறுதியாகாமலே இருந்து வருகிறது. பிரதமர் மோடி நேற்று சேலத்தில் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றுப் பேசினர். இதைத்தொடர்ந்து, பாஜக தொகுதிப் பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இன்று சீட்களை ஒதுக்கிய பாஜக: பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமமவுக்கு 2 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சிக்கும், பாரிவேந்தர் பச்சைமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சிக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ், ஜிகே வாசனுடன் இழுபறி: எனினும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் இன்னும் பாஜக் தொகுதியை இறுதி செய்யவில்லை. ஜிகே வாசன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உடன் இன்று பாஜக தரப்பு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

அமமுகவுக்கு 2 சீட்.. கையெழுத்தானது ஒப்பந்தம்.. கடைசியா டிடிவி தினகரன் சொன்னதை கேட்டீங்களா?


ஓ.பன்னீர்செல்வம் கேட்கும் தொகுதியை அமமுகவுக்கு பாஜக ஒதுக்க திட்டமிட்டுள்ளதால், ஓபிஎஸ் பாஜக வழங்கும் சீட்டுக்கு உடன்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. மீண்டும் ஓபிஎஸ்ஸை அழைத்துப் பேச பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஓபிஎஸ் பேட்டி: பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “பாஜகவுடன் நீண்ட ஆரோக்கியமான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. அண்ணா திரவிட தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து நாளை நல்லதொரு முடிவை அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+