அதிமுக லெட்டர்பேடு ப்ளஸ் மாஜி முதல்வர் பட்டம்- நித்தம் நித்தம் ஒரு நாடகம் நடத்தும் ஓபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் எத்தனை கலகங்களை ஏற்படுத்த முடியுமோ அத்தனையையும் செய்வது என்கிற முடிவில் ஒவ்வொரு நாளும் விதம்விதமான நாடகங்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் அரங்கேற்றி வருகிறார். அவரது இந்த போக்கால் அதிமுக எத்தனை துண்டாக சிதறிப் போகுமோ? என்கிற பதற்றத்தில் இருக்கின்றனர் அக்கட்சி தொண்டர்கள்.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்தார் ஓ. பன்னீர்ச்செல்வம். இதனால் கழக ஒருங்கிணைப்பாளர், அதிமுக என்கிற தனி லெட்டர் பேடில் அறிக்கைகளை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார் ஓபிஎஸ்.

இதில் கடுப்பாகிப் போனது எடப்பாடி பழனிசாமி தரப்பு. ஓபிஎஸ்-க்குப் போட்டியாக எடப்பாடி பழனிசாமியும் கூட அதிமுக லெட்டர் பேடை பயன்படுத்தாமல் தனி அறிக்கை வெளியிட்டார். அதில் கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் என இடம்பெற்றிருந்தது.

ஈபிஎஸ் அணி பேச்சுவார்த்தை

ஈபிஎஸ் அணி பேச்சுவார்த்தை

இதன்பின்னர் ஓபிஎஸ்-க்கு சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி தருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் தமது சகோதரர் மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்க வந்த இடத்தில் கட்சி பஞ்சாயத்தை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பேசியதால் ஓபிஎஸ் அதிருப்தி அடைந்தார்.

ஓபிஎஸ் புதிய நாடகம்

ஓபிஎஸ் புதிய நாடகம்

இதன்பின்னர் இப்போது ஓபிஎஸ் புதிய பாணி நாடகத்தை அதிமுகவில் அரங்கேற்றி வருகிறார். அதிமுக லெட்டர் பேடை பயன்படுத்தாததுதானே சர்ச்சையாகிறது.. அதனால் அதிமுக லெட்டர் பேடிலேயே, ஓ. பன்னீர்செல்வம், கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் என்ற பழைய பதவியையும் சேர்த்து அறிக்கை வெளியிடத் தொடங்கி இருக்கிறார் ஓபிஎஸ்.

ஈபிஎஸ்-க்கு போட்டியாக மாஜி முதல்வர் பதவி

ஈபிஎஸ்-க்கு போட்டியாக மாஜி முதல்வர் பதவி

இதற்கு காரணமே ஈபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் என இடம்பெற்றிருந்தது. ஈபிஎஸ்-ஸை விட தாமே மேல் என்பதை காட்டுவதற்காகவே இப்படி புதிய அவதாரத்தை காட்டத் தொடங்கி இருக்கிறாராம் ஓபிஎஸ்.

ஈபிஸ் பேரவைக்கு எதிர்ப்பு

ஈபிஸ் பேரவைக்கு எதிர்ப்பு

மேலும் அதிமுகவில் அண்மையில் ஈபிஎஸ் பேரவை ஒன்று வடமாவட்டங்களில் உருவானது. இதிலும் கடுமையான கோபத்தில் இருந்தார் ஓபிஎஸ். அவரை சமாதானப்படுத்தும் வகையில்தான் நேற்று ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கூட்டாக, கட்சி சட்ட விதிகளை மீறி நடந்தால் நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாம். அதிமுகவில்தான் நித்தம் நித்தம் ஒரு நாடகமப்பா!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+