"எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைப் பண்பு இல்லை.. முன்னாள் அமைச்சர்களுக்கு அவமரியாதை”.. ஓபிஎஸ் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தலைமைப் பதவிக்கான அறிகுறி இல்லாத எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக உள்ளதால் தொடர் தோல்விகளை சந்திக்கிறது. அதிமுக ஒற்றுமையை வலியுறுத்துபவர்கள் குறி வைத்து அவமரியாதை செய்யப் படுகிறார்கள்" என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை காரில் ஏற்றாதது மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அதிமுக எம்.பி தம்பிதுரையை பேச அனுமதிக்காததை குறிப்பிட்டு ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

O Panneerselvam Slams EPS Says AIADMK Losing Due to Lack of Leadership

ஓபிஎஸ் குற்றச்சாட்டு

ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இப்படிப்பட்ட மக்கள் இயக்கம் முப்பது ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்தது என்றால் அதற்குக் காரணம் தலைமைப் பண்பு மிக்க ஆளுமை மிக்க எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர்தான். சாதாரணத் தொண்டன் வணக்கம் தெரிவித்தாலும், பதிலுக்கு வணக்கம் தெரிவிக்கும் பண்பை கொண்டவர்கள் எம்.ஜி.ஆர், அவர்களும், ஜெயலிதா அவர்களும், தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடியந் தலைவர்களாக விளங்கியவர்கள். இந்தத் தலைமைப் பண்புதான் தொடர் வெற்றிக்கு வழிவகுத்தது.

அறிவு, அனுபவம் மேலாண்மைத் திறன், மற்றும் மனிதர்களை மதித்து நடந்துகொள்ளும் பண்பு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் தலைமைப் பண்பு. ஒரு சிறந்த தலைவர் என்பவர் அனைவரையும் துணையாகக் கொண்டு அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்பளித்து இயக்கத்தை திறம்பட மேலாண்மை செய்வார். இதற்கு மாறாக செயல்படுபவர் பிறர் பார்வையில் ஏளனத்திற்குரியவராக இருப்பார். ஆணவம், கடுங் கோபம், இழிவான நடத்தை போன்ற குணாதிசயங்களை கொண்டவர்கள் தலைமைப் பதவிக்கு அருகதையற்றவர்கள்.

தலைமைப் பண்பு இல்லை

தலைமைப் பண்பிற்கான அறிகுறி துளியும் இல்லாத முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களிடத்தில் மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது சிக்குண்டு கிடப்பதால், தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே. ராஜு மதுரையில் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை வரவேற்றுவிட்டு அவரது காரில் ஏறும்போது, அவர் வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார். இந்தக் காட்சி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இது செல்லூர் ராஜு அவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமரியாதை.

தம்பிதுரைக்கு இழுக்கு

இதேபோன்று எம்.ஜி.ஆர் அவர்களின் காலத்தில் மக்களவைத் துணைத் தலைவராக பதவி வகித்தவரும் ஜெயலலிதா அவர்களின் காலத்தில் மத்திய சட்ட அமைச்சராக பதவி வகித்தவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மு. தம்பிதுரை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது அதைத் தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்தக் காட்சியும் அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இது மு. தம்பிதுரை அவர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழுக்கு.

இதுபோல் வெளிவராத சம்பவங்கள் ஏராளம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்துபவர்கள் குறி வைத்து அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
"செயலின் வலிமை, தன் வலிமை, பகைவனின் வலிமை, துணை செய்பவர்களின் வலிமை இவற்றை ஆராய்ந்து செயலைச் செய்ய வேண்டும்" என்றார் திருவள்ளுவர். இதற்கு மாறான எந்தச் செயலும் படுதோல்வியில் தான் முடியும்." எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜு சம்பவம்

அண்மையில் மதுரை வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தனது காரில் செல்லூர் ராஜுவை ஏற்ற மறுத்ததாக வெளியான வீடியோவால் எழுந்த சர்ச்சைக்கு, செல்லூர் ராஜு விளக்கம் அளித்தார். "இபிஎஸ்-க்கு 'Z' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அவரது காரில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தனர். இடப் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே இபிஎஸ் வேறு காரில் சென்றார்" எனத் தெரிவித்தார்.

தம்பிதுரை சர்ச்சை

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முன்னாள் எம்.பி மைத்ரேயன் திமுகவில் சேர்ந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமியின் அருகில் அமர்ந்திருந்த அதிமுக எம்.பி தம்பிதுரை பதிலளிக்க முயன்றபொழுது ''இருண்ணா...'' எனக் கையை தட்டிவிட்ட எடப்பாடி பழனிசாமி, ''உட்கட்சி விவகாரம் குறித்து நீங்கள் கேட்காதீர்கள். உட்கட்சி விவகாரம் குறித்து பகிரங்கமாகப் பேச முடியாது." என்றார். அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை கையை இபிஎஸ் தட்டிவிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+