குடும்பத்தினர் அட்வைஸை குப்பையில் போட்ட ரவீந்திரநாத்! மூத்த மகனை கைகழுவும் முடிவில் ஓ.பன்னீர்செல்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் உட்பட அக்கா, தம்பி என குடும்பத்தினர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது மனைவி ஆனந்தியிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார் ரவீந்திரநாத் எம்.பி.

இதனால் மூத்த மகன் ரவீந்திரநாத் மீது ஓ.பன்னீர்செல்வம் மனம் வெறுத்து போனதுடன் கைகழுவும் முடிவுக்கும் வந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

O.Panneerselvam son Ravindranath MP has filed for divorce from his wife Anandhi

பிள்ளைகள் தோளுக்கு மேல் வரவுள்ள போது எடுக்கின்ற முடிவா இது என குடும்பத்தினர் தரப்பில் ரவீந்திரநாத்திடம் எடுத்துக் கூறியும் அவர் யார் பேச்சையும் சட்டை செய்யவில்லை. அதுமட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் ரவீந்திரநாத் சில முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே அரசியல் நெருப்பாற்றில் நீந்திக்கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மூத்த மகன் மூலம் மிகுந்த மன வேதனையும், கவலையும் ஏற்பட்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இருந்தவரை குடும்பத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக போய்க்கொண்டு இருந்தது.

அவரது மறைவுக்கு பிறகு தான் குடும்பத்தில் பஞ்சாயத்துக்கள் ஆரம்பித்திருக்கின்றன. இதனிடையே நெருக்கடியான காலத்தில் தாம் பயணித்துக் கொண்டிருக்கும் போது தனக்கு தனது மூத்த மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் பேருதவியாக இருப்பார் என நம்பி ஏமாற்றம் அடைந்த ஓ.பன்னீர்செல்வத்தை அவரது மகள் மற்றும் இளைய மகன் ஜெயபிரதீப் ஆகியோர் சமாதானம் செய்து வருகிறார்கள்.

அண்மையில் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. மீது காயத்ரி தேவி என்பவர் அளித்த பாலியல் தொல்லை புகார் காரணமாக கணவன் -மனைவி இடையே வாக்குவாதமும், மோதலும் முற்றியிருக்கிறது. இதன் வெளிப்பாடாக விவாகரத்து முடிவை எடுத்திருக்கிறார் ரவீந்திரநாத்.

இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் ரவீந்திரநாத்தின் மூத்த மகன் இப்போது +2 படித்துக் கொண்டிருப்பது தான். மொத்தம் ரவீந்திரநாத் -ஆனந்தி தம்பதிக்கு 3 பிள்ளைகள்.

ஓ.பி,ரவீந்திரநாத்தை பொறுத்தவரை இப்போது பெரும்பாலும் டெல்லியிலும், சென்னையிலும் தான் இருந்து வருகிறார். தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு சென்று 15 நாட்களுக்கு மேல் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் முடிந்ததும் அவரை ஊருக்கு வரவழைத்து முடிவை மாற்ற வைப்பதற்கான முயற்சிகளும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+