சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜூலை 11 சான்ஸே இல்லை! நீண்ட "லீகல்" யுத்தத்தில் குதித்த ஓபிஎஸ்.. "மும்முனை" தாக்குதல்.. அரண்ட அதிமுக

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கனவு கண்டுகொண்டு இருக்கும் போது.. பாஸ் தூங்குனது போதும் எந்திரிங்க என்று கனவை கலைத்து இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். அவருக்கு எதிராக 3 திசைகளில் இருந்து மும்முனை தாக்குதலை தொடுத்து உள்ளார் ஓ பன்னீர்செல்வம்!

Recommended Video

    OPS எடுத்த 2 முக்கிய Moves! | Delhi போட்டுக்கொடுத்த Root? | AIADMK |*Politics

    அதிமுகவில் கடந்த பொதுக்குழுவிற்கு முன்புவரை ஓ பன்னீர்செல்வம் பூ பாதையில்தான் சென்று கொண்டு இருந்தார். பெரிதாக ஆதரவாளர்களை பிடிக்க முடியவில்லை.. நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்க முடியவில்லை.. இருந்தவர்களையும் தக்க வைக்க முடியவில்லை என்று பல "இல்லைகளால்" கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தார்.

    ஆனால் அதே பன்னீர்செல்வம்.. டெல்லி பயணம் முடித்துவிட்டு வந்ததும்.. ரீ ஸ்டார்ட் செய்யப்பட்ட லேப்டாப் போல சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கி உள்ளார்.

    அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை எளிதில் நீக்க முடியுமா?. எம்ஜிஆர் வகுத்த விதி சொல்வதென்ன? அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை எளிதில் நீக்க முடியுமா?. எம்ஜிஆர் வகுத்த விதி சொல்வதென்ன?

    என்ன செய்தார்?

    என்ன செய்தார்?

    டெல்லி பயணம் முடித்துவிட்டு வந்த மறுநாளே ஓ பன்னீர்செல்வம் நேரடியாக தென் மண்டல பயணத்தை தொடங்கினார். முன்னதாக சென்னையில் மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதன்பின் தென் மண்டலத்தில் இருக்கும் நிர்வாகிகளை சந்திக்க ரெடியானார். விமானம் மூலம் மதுரை சென்றவர் அங்கு முக்குலத்தோர் சொந்தங்களை சந்தித்தார். அவருக்கு அங்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கிருந்து காரில் தேனி சென்றார்.

    முக்குலத்தோர்

    முக்குலத்தோர்

    தேனியில் இரவோடு இரவாக பல்வேறு மீட்டிங்குகளை நடத்தினார். தன்னைவிட்டு போன நிர்வாகிகளை மீண்டும் தன் பக்கம் இழுக்கும் விதமாக ஆலோசனைகளை செய்தார். முக்கியமாக முக்குலத்தோர் பிரிவு நிர்வாகிகளை தன் பக்கம் கொண்டு வர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதை பார்த்து அரண்டு போய்தான் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பு அவசர அவசரமாக சென்னையில் தலைமை கழக கூட்டத்தை நடத்தியது.

    மும்முனை தாக்குதல்

    மும்முனை தாக்குதல்

    இந்த நிலையில்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகும் எடப்பாடியின் கனவை கலைக்க ஓபிஎஸ் 3 விதங்களில் முயற்சி எடுத்துள்ளார். 3 விதமான சட்ட போராட்டங்களை நடத்த உள்ளார். 2 வழக்கு, 1 தேர்தல் ஆணைய முறையீடு என்று எடப்பாடிக்கு செக் வைக்க ஓ பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். முதலாவது.. அதிமுக பொதுக்குழு, தலைமைக்குழு விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு அளித்துள்ளார். இது முதல் சட்ட போராட்டம் ஆகும்.

     தேர்தல் ஆணையம் மனு

    தேர்தல் ஆணையம் மனு

    அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இருக்கும் போது தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த வேறு யாருக்கும் அனுமதி இல்லை. எனவே நேற்று தலைமை கழக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் மனு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் அவர் தாக்கல் செய்துள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும். நேற்று தலைமை கழகத்தில் என்ன முடிவு எடுத்து இருந்தாலும்.. அது பொதுக்குழுவிற்கு அழைப்பிதழ் அனுப்பும் முடிவாக இருந்தாலும்.. அதை சட்ட விரோதம் என்று அறிவிக்க ஓபிஎஸ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    இரண்டாவது மனு

    இரண்டாவது மனு

    இரண்டாவது சட்ட போராட்டம்.. அவமதிப்பு வழக்கு ஆகும். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் சண்முகம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். கடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது , அடுத்த பொதுக்குழுவிற்கான அறிவிப்பு வெளியிட்டது, அவை தலைவரை தேர்வு செய்தது என்று அனைத்தையும் கோர்ட் அவமதிப்பு என்று உத்தரவிட கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

    மூன்றாவது வழக்கு

    மூன்றாவது வழக்கு


    இது போக மூன்றாவது சட்ட போராட்டமும் உள்ளது.. அது கேவியட் மனு. அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த முறை அதிமுக பொதுக்குழுவை நடத்தவும், அதில் ஒற்றை தலைமை தீர்மானம் வர கூடாது, அப்படியே வந்தாலும் ஒருங்கிணைப்பாளர் முன் வரைவு தீர்மானம் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து எடப்பாடி தரப்பு கோர்ட்டுக்கு போனால் தன் கருத்தை கேட்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்துள்ளார்.

    நீண்ட லீகல் போராட்டம்

    நீண்ட லீகல் போராட்டம்

    இதில் உச்ச நீதிமன்ற வழக்கு, உயர் நீதிமன்ற வழக்கு இரண்டும் சிவில் வழக்கு ஆகும். இதில் விசாரணை தொடங்கினால் நீண்ட காலம் நடக்கும். அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டாலும்.. அவசரமாக விசாரணை முடியாது. எனவே பொதுக்குழுவிற்கு இடைக்கால தடை விதிக்கப்படவே வாய்ப்புகள் உள்ளன. வழக்கும் நீண்ட நாட்களுக்கு நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதோடு தேர்தல் ஆணையத்திலும் தலைமை குழுவிற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    வழக்கு திட்டம்

    வழக்கு திட்டம்

    இது போக அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடக்கும் என்று அவை தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்ததற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தனியாக நேரடி வழக்கு தொடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. சட்டப்படி அதிமுகவில் பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதாவது ஓபிஎஸ்ஸுக்கும் - இபிஎஸ்ஸுக்கும் மட்டுமே அதிகாரம் உள்ளது, என்று கூறி இவர் வழக்கு தொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. பொதுக்குழுவிற்கு எதிராக இப்படி அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் போடப்பட உள்ளது. நீண்ட சட்ட போராட்டங்கள் நடக்க உள்ளதால்.. பொதுக்குழு திட்டமிட்டபடி ஜூலை 11ம் தேதி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    English summary
    O Panneerselvam starts 3 long legal batteles against Edappadi Palanisamy in AIADMK. அதிமுகவில் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கனவு கண்டுகொண்டு இருக்கும் போது.. பாஸ் தூங்குனது போதும் எந்திரிங்க என்று கனவை கலைத்து இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X