சிறகடிக்க ஆசையில் மீனாவை கண்ணில் காண விடாத விஜயா... ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன செய்கிறார் பாருங்க!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தினமும் பரபரப்பான திருப்பங்களால் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது. குறிப்பாக விஜயா செய்யும் செயல்கள் பல நேரங்களில் ரசிகர்களை கடுப்பேற்றியும், சில நேரங்களில் அதிர்ச்சியடையவும் செய்து வருகிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சமீபத்திய எபிசோடுகளில், வீடு சீல் வைக்கப்பட்ட பிரச்சனையால் குடும்பமே பெரும் சிக்கலில் சிக்கியிருக்கிறது. இந்த பிரச்சனையிலிருந்து விஜயாவை காப்பாற்ற மீனாவும் முத்துவும் எவ்வளவோ தியாகங்கள் செய்து வருகிறார்கள். சிந்தாமணி விஷயத்தில் உண்மையை கண்டுபிடித்து விஜயாவுக்காக ஓடிக் கொண்டிருப்பதும் இவர்கள்தான்.
ஆனால் அதையெல்லாம் கொஞ்சமும் நினைத்து பார்க்காமல், மீனா மீது குற்றம் சுமத்தி, "வீட்டை காப்பாற்ற பதவியை ராஜினாமா செய்திருக்கலாமே" என்று விஜயா பேசும் காட்சிகள் ரசிகர்களை கடும் கோபமடைய வைத்தது. முத்துவும் மீனாவும் எவ்வளவு செய்தாலும், விஜயா பார்வையில் இன்னும் வீட்டின் வேலைக்காரர்கள் போலத்தான் என்ற உணர்வை சீரியல் தொடர்ந்து கொடுத்து வருகிறது. அதனால்தான் பல ரசிகர்கள், "இந்த விஜயா எப்போதாவது மாறுவாரா?" என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது
ஆனால் சீரியலில் இப்படியொரு பனிப்போர் நடக்கும்போதும், கேமராவுக்கு பின்னால் கதை வேற மாதிரி இருக்கிறது. மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதி பிரியா, முத்துவாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த வெற்றி வசந்த், எப்போதும் இவர்களை விரட்டிக்கொண்டிருக்கும் விஜயாவாக நடிக்கும் அணிலா என இவர்கள் சேர்ந்து செம ஜாலியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சீரியல் பிரபலங்கள் போட்டோஸ்
சீரியலில் ஒருவரை ஒருவர் பார்த்தாலே சண்டை, குற்றச்சாட்டு, கண்ணீர், கோபம் என இருக்கும் இந்த மூவரும், சூட்டிங் ஸ்பாட்டில் சிரித்தபடி நெருக்கமாக போஸ் கொடுத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். "சீரியலில் மீனா-முத்துவை ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லாத விஜயா, ஆஃப் ஸ்க்ரீனில் இவ்வளவு பாசமா?", "எங்களை ஏமாத்திட்டீங்களே!", "திரையில் வில்லி... நேரில் செம ஜாலி" என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
ஒருபுறம் சீரியலில் குடும்பப் பிரச்சனை உச்சத்தை எட்டிக்கொண்டிருக்க, மறுபுறம் சூட்டிங் ஸ்பாட்டில் இந்த மூவரின் நட்பு ரசிகர்களுக்கு வேற லெவல் சர்ப்ரைஸாக மாறியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், "திரையில் இவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும், நிஜத்தில் எல்லோரும் குடும்பம் மாதிரி தான் இருக்காங்க" என்று மகிழ்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications