ஒபிஎஸ் அணியில் மேலும் இரண்டு விக்கெட்.. திமுகவில் நாளை இணையும் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன்?
சென்னை: ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தனது எம்.எல்.ஏ பதவியையும் நாளை அவர் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எற்கனவே ஓ பிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியனும் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது வைத்திலிங்கமும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல் முன்னாள் அமைச்சரும், ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளருமான வெல்லமண்டி நடராஜனும் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

திமுகவில் இணையும் வைத்திலிங்கம்?
ஓ. பன்னீர் செல்வம் அணியில் முக்கிய தளபதியாக இருந்தவர் வைத்திலிங்கம். அதிமுகவில் தலைமை பதவியை எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஓ. பன்னீர் செல்வத்திற்கு பக்கபலமாக வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இருந்தனர்.
அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர் செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அதன்பிறகு அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் இயங்கி வரும் ஓ. பன்னீர் செல்வம் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திமுகவில் இணைந்தார்.
அதன்பிறகு வைத்திலிங்கமும் ஓ. பன்னீர் செல்வம் அணியில் இருந்து விலக இருப்பதாக தகவல் பரவியது. வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக செய்திகள் வெளியாகின. ஆனாலும் இதனை வைத்திலிங்கம் மறுத்தார். இந்த நிலையில்தான் வைத்திலிங்கம் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்
நாளை காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வைத்திலிங்கம் திமுகவில் இணைய இருப்பதாகவும், அதற்கு முன்பாக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
வரும் 23 ஆம் தேதி பிரதமர் மோடி செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஓ. பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில்தான் வைத்திலிங்கம் திமுகவில் இணைய முடிவு எடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
வெல்லமண்டி நடராஜனுன் திமுகவில் இணைகிறார்?
இதேபோல் முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் நாளை இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சிற்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியிருந்ததாலும், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் இணைக்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்ததால் தற்போது வெல்லமண்டி நடராஜன் மற்றும் வைத்திலிங்கம் நாளை திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட வைத்திலிங்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 2001-2006 வரை வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். அதேபோல, 2011-2016 வரை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த வைத்திலிங்கம், ராஜ்யசபா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications