பெரிய சிக்கலாகிடும்.. மீட்டிங்கில் சீறிய ஓபிஎஸ்.. அட்வைஸ் தந்த அரசியல் "சாணக்கியர்".. ஒரே புலம்பல்!
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் நேற்று முக்கியமான ஆலோசனை ஒன்றை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் அரசியல் சாணக்கியர் ஒருவர் ஓ பன்னீர்செல்வத்திற்கு முக்கியமான அட்வைஸ் ஒன்றை கொடுத்ததாக மீட்டிங் சென்ற ஓபிஎஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் அதிமுக கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே உட்கட்சி மோதல் உச்சத்தில் இருந்த அதிமுகவில் ஈரோடு கிழக்கு இடைதேர்தலால் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி என்று அதிமுகவின் இரண்டு அணியும் இதில் மோதுவதால் எங்கே சின்னம் முடங்கிவிடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இரண்டு தரப்பும் அடுத்தடுத்து பல்வேறு மீட்டிங்குகளை நடத்தி வருகின்றன.

மீட்டிங்
இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சார்பாக அதிமுக அணி வேட்பாளர் களமிறக்கப்பட உள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக இந்த முறை அதிமுகவே போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார்.அதேபோல் ஓ பன்னீர்செல்வம் சார்பாக அவரது ஆதரவாளரும் களமிறக்கப்பட உள்ளார். நாங்கள்தான் உண்மையான அதிமுக. என்னால் சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சின்னம் முடங்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. இங்கே வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம், என்று கூறி உள்ளார்.

பாஜக நிலைப்பாடு
இந்த இடைத்தேர்தலில் பாஜக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலையே, ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியின் பவர் + பண பலம் இரண்டையும் சமாளிக்க வேண்டும் என்பதால், வலிமையான கட்சிதான் களமிறங்க வேண்டும். எங்கள் கூட்டணியில் வலிமையான கட்சி என்றால் அது அதிமுகதான். நாங்கள் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்போம் என்பதை விரைவில் அறிவிப்போம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இதில் முடிவு எடுக்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனால் அண்ணாமலை அதிமுகவிற்கு ஆதரவு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக
ஆனால் அதிமுகவில் எந்த அணிக்கு அவர் ஆதரவு கொடுப்பார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில்தான் நேற்று ஓ பன்னீர்செல்வம் இது தொடர்பாக முக்கியமான ஆலோசனை ஒன்றை மேற்கொண்டு இருக்கிறார். ஈரோடு கிழக்கில் என்ன செய்யலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்துள்ளனர். ஓ பன்னீர்செல்வத்திற்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வரும் பண்ருட்டி ராமசந்திரன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் சில நிர்வாகிகள் புலம்பியபடி பேசி உள்ளனர்.

புலம்பல்
அதன்படி, பாஜக இதில் இன்னும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஒருவேளை பாஜக எடப்பாடியை ஆதரிக்க முடிவு செய்தால் எல்லாம் போய்விடும். நமக்கு பெரிய சிக்கலாகிவிடும். நாம் வேட்பாளரை நிற்க வைத்தாலும் பயன் இல்லாமல் போய்விடும். சின்னமும் நம் கையை விட்டு போய்விடும். அதனால் நாம் சாமர்த்தியமாக முடிவு செய்ய வேண்டும். பாஜக தரப்பு எடப்பாடியை ஆதரித்தால், நாம் வேட்பாளரை நிறுத்தாமல் பின்வாங்கிக்கொள்ள வேண்டும் என்று சிலர் புலம்பலாக கூறி இருக்கிறார்களாம். ஆனால் ஓ.பன்னீர்செல்வமோ.. அதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். டெல்லி நம்முடன் இருக்கிறது.

ஆதரவு
பாஜகவிற்கு நாம் மிகவும் முக்கியம். அப்படி எல்லாம் பாஜகவினர் நம்மை கைவிட்டுவிட மாட்டார்கள். அதனால் நமபிக்கையாக இருங்கள் என்று ஆறுதல் சொல்லி இருக்கிறாராம். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பண்ருட்டி ராமசந்திரன், தேர்தலில் களமிறக்கப்பட உள்ள வேட்பாளர் குறித்து நாம் ஆலோசனை செய்ய வேண்டும். செலவு செய்ய பணம் இருக்கும் நபர் போட்டியிட வேண்டும். அப்படி இருக்கும் கட்சி நிர்வாகியை நாம் களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், என்று அட்வைஸ் கொடுத்துள்ளாராம்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications