கடைசி சான்ஸ்.. நொடிந்து போன ஓ பன்னீர்செல்வம்.. உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு
இந்த வழக்கில் தங்களுக்கும் சாதகமாக சில விஷயங்கள் இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். விரைவில் இந்த மனு தாக்கல் செய்யப்படும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்து உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து அதிமுகவில் நடந்த உட்கட்சி மோதலுக்கு தற்போது தீர்வு கிடைத்து உள்ளது.
கட்சிக்கு யார் தலைமை.. இரட்டை தலைமையா? ஒற்றை தலைமையா? என்ற கேள்வி நிலவி வந்த நிலையில்தான் அனைத்து கேள்விகளுக்கும் நேற்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் விடை கிடைத்து உள்ளது.

தீர்ப்பு
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கினர். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

நீக்கம் செல்லும்
இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பு மூலம் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு உள்ளார். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் வகித்து வந்த பதவிகள் அனைத்தும் நீக்கப்படுகின்றது. எடப்பாடி மூலம் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார். அதுவும் இப்போதைக்கு செல்லும். எடப்பாடி மூலம் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார். அதுவும் இப்போதைக்கு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிவில் வழக்கு
இந்த நிலையில்தான் இந்த வழக்கில் தங்களுக்கும் சாதகமாக சில விஷயங்கள் இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது. முக்கியமாக உச்ச நீதிமன்றம் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஒரே ஒரு ஆறுதல் செய்தி கொடுத்து உள்ளது. அதிமுக பொதுக்குழு வழங்கில் எடப்பாடி பழனிசாமி வென்று இருந்தாலும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக தனியாக ஓபிஎஸ் சிவில் வழக்கு தொடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அதாவது தீர்மானங்களை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் சிவில் வழக்கு தொடுக்க முடியும். சிவில் வழக்கு என்றால், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கலாம்.

முடிவு என்ன
பொதுக்குழு கூடிய விதத்தை எதிர்க்க முடியாது. மற்றபடி பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை அவர் எதிர்க்கலாம். இது மட்டுமே ஓ பன்னீர்செல்வத்திற்கு வந்து இருக்கும் கொஞ்சம் சாதகமான செய்தி. இந்த நிலையில் விரைவில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் சிவில் வழக்கு தொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இல்லாமல் அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். விரைவில் இந்த மனு தாக்கல் செய்யப்படும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications