சரியாக கூட சாப்பிடாத ஓ.பன்னீர்செல்வம்! மீட்டிங் மேல் மீட்டிங்! பரபரக்கும் நிமிடங்கள்! அடுத்தது என்ன?
சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கான நேரம் நெருங்க நெருங்க ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பிபி எகிற ஆரம்பித்துள்ளது.
இவ்வளவு முயன்றும் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக நிற்கிறாரே என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களுக்குள் ஆதங்கப்பட்டுக் கொள்கிறார்கள்.
இதனிடையே நேற்றும் இன்றும் சாப்பிடக் கூட நேரமில்லாமல் மீட்டிங் மேல் மீட்டிங் நடத்தி கடைசிகட்டமாக அடுத்தது என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

தொடர் ஆலோசனை
அதிமுக பொதுக்குழுவை எப்பாடு பட்டேனும் நிறுத்திவிட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருக்கிறார். ஒரு பக்கம் நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் மறுபக்கம் அரசியல் லாபி என அனைத்து அஸ்திரங்களையும் முழுமையாக பயன்படுத்தி விட்டார் ஓ.பன்னீர்செல்வம். ஆனாலும் காற்று என்னவோ எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் வீசுகிறது. இதனால் கடும் அப்செட்டில் உள்ள அவர் கடந்த 2 நாட்களாக சரியாக கூட சாப்பிடவில்லையாம்.

சோதனைக் காலம்
ஏற்கனவே மனைவி காலமான துயரத்தில் இருந்து இப்போது தான் படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதற்குள் கட்சியில் தனக்கு இப்படி ஒரு சோதனைக் காலம் வரும் என்பதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லையாம். கடந்த வாரம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பற்றி பேசப்பட்ட போது கூட அது இவ்வளவு தூரம் அது சீரியஸாகும் என ஓபிஎஸ் எதிர்பார்க்கவில்லையாம்.

தொடர் ஆலோசனை
இதனிடையே மூத்த பத்திரிகையாளர்கள் சிலருடன் ஆலோசனை செய்த ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்த கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டாராம். வழக்கறிஞர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், முக்கியப் பிரமுகர்கள், கீழ்மட்ட நிர்வாகிகள் என மாறி மாறி ஒவ்வொரு டீமையும் சந்தித்து நாள் முழுக்க ஆலோசனை மேல் ஆலோசனை நடத்தி அசந்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். இதனிடையே இன்று மாலை அவர் என்ன இறுதி முடிவெடுத்துள்ளார் என்ற விவரம் தெரிந்துவிடும்.
Recommended Video

சையது கான்
இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக தேனி மாவட்டச் செயலாளர் சையது கானை நாம் தொடர்பு கொண்டு பேசினோம், ''நான் இப்போது தான் தேனியில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறேன். மாலை தான் அமைச்சரை (ஒபிஎஸ் ஸை தேனி மாவட்ட அதிமுகவினர் அப்படித்தான் அழைக்கிறார்கள்)சந்திக்க வேண்டும். அதன் பிறகு தான் அவர் என்ன நிலைப்பாடு எடுத்திருக்கிறார் என்பது எனக்கே தெரியும். என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.'' எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications