இரவோடு இரவாக தேனியிலிருந்து வந்த வேன்! தில்லாக புறப்பட்ட ஓபிஎஸ்! பாதுகாப்பு அரணாக ஆதரவாளர்கள்!
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் வழக்கமாக பயணிக்கும் காரை தவிர்த்துவிட்டு, பாதுகாப்பு நலன் கருதி பிரச்சார வேனில் பயணம் செய்திருக்கிறார்.
Recommended Video
வேனின் இரு மருங்கிலும் பாதுகாப்பு படை வீரர்களை போன்று அவரது ஆதரவாளர்கள் தொங்கி நின்று ஓபிஎஸ் க்கு பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் ஓ.பன்னீர்செல்வம் பயணிக்கும் வேனின் பின்னால் 50-க்கும் மேற்பட்ட கார்கள் புடை சூழந்து சென்றன.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழுவில் தனது கவனத்துக்கு வந்த 23 தீர்மானங்களை தவிர புதிதாக எந்த ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அவர் எதிர்பார்த்ததை போலவே அதிகாலையில் தீர்ப்பு வந்ததால் மனிதர் உற்சாகம் அடைந்துவிட்டார். அதே உற்சாகத்தோடு பொதுக்குழு நடைபெறவுள்ள வானகரத்தை நோக்கி காலை 8.30 மணிக்கெல்லாம் புறப்பட்டுவிட்டார்.

கூடுதல் பாதுகாப்பு
எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வது குறித்து புதிய தீர்மானத்தை நிறைவேற்ற காத்திருந்த அவரது ஆதரவாளர்களுக்கு அதிகாலையில் வந்த நீதிமன்ற தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால் பொதுக்குழுவில் பங்கேற்க செல்லும் ஓ.பன்னீர்செல்வத்திடம் அந்தக் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்தினாலும் வெளிப்படுத்துவார்கள் என கருதிய ஓபிஎஸ் டீம் வழக்கத்தைக் காட்டிலும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுத்துள்ளது.

கார் வேண்டாம்
ஓ.பன்னீர்செல்வம் வழக்கமாக பயணிக்கும் இன்னோவா காரை தவிர்த்து தேர்தல் பிரச்சாரத்தின் போது பயணிக்கும் பிரச்சார வேன் தேனியிலிருந்து இரவோடு இரவாக வரவழைக்கப்பட்டது. அந்த வேனில் முன் பக்க இருக்கையில் கம்பீரமாக ஓ.பன்னீர்செல்வம் அமர, இரு புறமும் ஆதரவாளர்கள் பாதுகாப்பு படை வீரர்களாக மாற பயணம் தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் காவல்துறை ஸ்குவாட் பாதுகாப்பும் தரப்பட்டுள்ளது.

மண்டப வாசல்
அதிமுக பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் குழுமியிருக்கும் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவேளை வேனை மறித்தால், அதனை எதிர்கொள்ளவும் ஆட்களை திரட்டி வைத்துள்ளது ஓ.பன்னீர்செல்வம் டீம். சினிமா பட கிளைமாக்ஸை விஞ்சும் வகையில் அதிமுகவில் அரங்கேறி வரும் ஒவ்வொரு காட்சிகளும் உள்ளன.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக்












Click it and Unblock the Notifications