தீர்ப்புக்கு மத்தியில் இன்னொரு கவலை.. உடனே தேனிக்கு விரைந்த ஓபிஎஸ்.. காரணம் என்ன தெரியுமா?
உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதற்கு மத்தியில், ஓபிஎஸ்ஸின் தாயார் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக, தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், போடியில் இருந்து தேனி சென்று தனது தாயாரை பார்த்து, சிகிச்சை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த மாவட்டமான தேனியில் இருக்கிறார்.
இதற்கிடையே, தனது தாயார் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று, ஓபிஎஸ் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் தாயார்
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள். 90 வயதைக் கடந்த இவர் தற்போது தேனி பெரியகுளத்தில் வசித்து வருகிறார். அவருக்கு இன்று திடீரென கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் அனுமதி
பல ஆண்டுகளாக தொடர்ந்து உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் பழனியம்மாள், சமீபத்தில் மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். ஆனாலும், வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

உடனே விரைந்த ஓபிஎஸ்
சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்ததால் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததுமே, போடியில் இருந்த ஓபிஎஸ் உடனடியாக தேனிக்கு விரைந்து சென்று, தனது தாயாரை பார்த்துவிட்டு, தனது தாயாருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

கவலையில் மூழ்கிய ஓபிஎஸ்
இதற்கிடையே தான், அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால், ஓபிஎஸ் கட்சியிலேயே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் என்றால், தனது தாயாரின் உடல்நிலை குறித்தும் கவலையில் மூழ்கியுள்ளார் ஓபிஎஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications