விஜயகாந்த் "ஹேப்பி".. நாளைக்குள் நல்ல முடிவு எட்டப்படும்.. ஓபிஎஸ் மகிழ்ச்சி!
விஜயகாந்த் பூரண குணமடைந்து ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: விஜயகாந்த் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்தேன் என்றும், அவர் ரொம்பவும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுகவில் கூட்டணி சமாச்சாரம் கிட்டத்தட்ட முடிந்து வரும் நிலையில்... அதிமுகவில் கூட்டணி இழுபறி நடந்து வரும் வேளையில்... நாளைய தினம் தேமுதிகவின் செயற்குழு கூட்டம் நடக்க உள்ள நேரத்தில்... தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்து பேசி உள்ளார்.
விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பி 20 நாட்கள் ஆகிறது. இதில் ரஜினி, ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் விஜயகாந்த் "உடல்நிலை" பற்றி அறிந்து கொள்ள அவரது வீட்டுக்கே நேரிடையாக சென்ற நிலையில், இப்போது ஓ.பன்னீர்செல்வமும் "உடல்நிலை " பற்றி விசாரிக்க சாலிகிராம் வீட்டுக்கு இன்று மாலை சென்றார்.

45 நிமிடம் பேச்சு
அவருடன் அமைச்சர் ஜெயக்குமாரும் விஜயகாந்த் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு விஜயகாந்த்தை சந்தித்து இருவரும் கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கும் மேலாக பேசியதாக தெரிகிறது.இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்து செய்தியாளர்களிடம் ஓ பன்னீர்செல்வம் சொன்னதாவது:

சுறுசுறுப்பு
"விஜயகாந்த் பூரண குணமடைந்து ஆரோக்கியத்துடன் இருக்கிறார். சுறுசுறுப்பாக மகிழ்ச்சியாக இருக்கிறார், நன்றாக பேசினார். நாங்களும் எப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற எங்களது விருப்பத்தைத் தெரிவித்தோம்.

நாளை முடிவு
நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக பேசி வருகிறோம். யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை இன்றோ அல்லது நாளையோ தெரிவிப்போம். இன்றோ நாளையோ அது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்.

விஜயகாந்த்
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக் கூட்ட மாநாட்டில் அனைத்துத் தலைவர்களும் கலந்து கொள்வோம். அந்த கூட்டத்தில் விஜயகாந்த்தும் கண்டிப்பாக இருப்பார்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications