Odisha Coromandel Express Train Accident LIVE: ஒடிஷாவில் இன்று சரக்கு ரயில் தடம் புரண்டது

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலம் பர்கார் என்ற இடத்தில் சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பான தகவல்களை இப்பக்கத்தில் காணலாம்

ரயில் விபத்து - தமிழ்நாடு அரசு உதவி எண் அறிவிப்பு; ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு; 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் அறியலாம்; ரயில் விபத்து தொடர்பாக உதவி பெற 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண் அறிவிப்பு

Odisha  Coromandel express Train accident Live Updates

Jun 05, 2023, 11:11 am IST

பர்கார் பகுதியில் சுண்ணாம்புக்கல் ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டதாக தகவல்
சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகிய நிலையில், மீட்பு பணி தீவிரம்
Jun 05, 2023, 11:05 am IST

ஒடிஷாவில் சுண்ணாம்பு கல் ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது
Jun 05, 2023, 11:00 am IST

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
Jun 05, 2023, 10:37 am IST

விபத்து நிகழ்ந்த பாலசோர் வழித்தடத்தை கடந்தது ஹவுரா- பூரி வந்தே பாரத் ரயில்
Jun 05, 2023, 10:28 am IST

ஒடிஷா பாலசோர் வழித்தடத்தில் 60 மணிநேரத்துக்கு பின் குறைந்த வேகத்தில் பயணிகள் ரயில் இயக்கம்!
Jun 05, 2023, 10:22 am IST

ஒடிஷா விபத்து- 4 அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு
Jun 05, 2023, 10:12 am IST

ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியில் இலவச கல்வி!
Jun 05, 2023, 9:08 am IST

ஒடிசா ரயில் விபத்து : காரக்பூரில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று விசாரணை
Jun 05, 2023, 8:02 am IST

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், உறவினர்கள் செல்வதற்கு வசதியாக சென்னை சென்ட்ரலில் இருந்து புவனேஷ்வருக்கு இன்று இரவு 7.20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயிலில் செல்ல விரும்புபவர்கள் சென்ட்ரலில் உள்ள உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
Jun 05, 2023, 7:46 am IST

ஒடிஷாவின் பாலசோர் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கம்
Jun 05, 2023, 7:45 am IST

60 மணிநேரத்துக்கு பின் பயணிகள் ரயில் ஒடிஷா பாலசோர் வழித்தடத்தில் இயக்கம்
Jun 05, 2023, 7:44 am IST

ஒடிசா வழியாக செல்லும் 125 ரயில்கள் ரத்து
Jun 05, 2023, 7:43 am IST

56 எக்ஸ்பிரஸ் ரயில்கள் வேறு பாதை வழியே செல்லும்
Jun 05, 2023, 7:43 am IST

சென்னை-ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து
Jun 05, 2023, 7:31 am IST

விபத்து காரணமாக ரத்து ஆன கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இயக்கம்
Jun 05, 2023, 7:31 am IST

கோரமண்டல் விரைவு ரயில் சென்னையில் இருந்து 10.45 மணிக்கு புறப்படும்
Jun 05, 2023, 7:29 am IST

காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் தாமதமாக புறப்பட்டு செல்கிறது
Jun 05, 2023, 6:48 am IST

ஒடிஷா ரயில் விபத்து: பாஜகவை கடுமையாக சாடிய ராகுல் காந்தி
Jun 05, 2023, 6:48 am IST

ரயில் விபத்துக்கு 50 ஆண்டுகளுக்கு முந்தைய காங். காரணம் என சொல்லும் பாஜக- ராகுல்
Jun 05, 2023, 6:46 am IST

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்தியர்களிடையே ராகுல் காந்தி பேச்சு
Jun 04, 2023, 9:49 pm IST

ஒடிசா ரயில் விபத்தில் 270+ பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இதுவரை இதற்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் உடனடியாக ரயில்வே அமைச்சரை ராஜினாமா செய்யப் பிரதமர் வலியுறுத்த வேண்டும் - ராகுல் காந்தி
Jun 04, 2023, 6:47 pm IST

ஒடிசா ரயில் விபத்தை சிபிஐ விசாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரை- ரயில்வே அமைச்சர்
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்தது - ரயில்வே அமைச்சர்
இப்போது அங்கே சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது- ரயில்வே அமைச்சர்
Jun 04, 2023, 6:21 pm IST

ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்களின் நிலை குறித்து அமைச்சர் உதயநிதி விளக்கம்
ரயில் விபத்தில் தமிழர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை- அமைச்சர் உதயநிதி
சிலரின் நிலை குறித்து அறிய முயற்சி நடைபெற்று வருகிறது- அமைச்சர் உதயநிதி
ஒடிசா அமைச்சர்களிடம் பேசி தமிழர்களின் நிலை குறித்து கேட்டறிந்தோம்- அமைச்சர் உதயநிதி
மீட்பு பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்- அமைச்சர் உதயநிதி
ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்- அமைச்சர் உதயநிதி
Jun 04, 2023, 2:20 pm IST

சீரமைக்கப்பட்டுள்ள ஒடிஷா ரயில் விபத்து நிகழ்விடம்
Jun 04, 2023, 2:09 pm IST

அஸ்ஸாம் விமானத்தில் கோளாறு- மத்திய அமைச்சர் ராமேஸ்வர் தெவி உயிர் தப்பினார்
அஸ்ஸாம் விமானத்தில் கோளாறு- அமைச்சர் உட்பட 150 பேர் உயிர் தப்பினர்
அஸ்ஸாம் குவஹாத்தி- திப்ரூகர் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
Jun 04, 2023, 2:08 pm IST

ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழப்பு - ஒடிசா தலைமை செயலர்!
Jun 04, 2023, 2:06 pm IST

ஒடிசா மருத்துவமனையில் இலவச உணவு மற்றும் தண்ணீர் வழங்கும் தன்னார்வலர்கள்!
Jun 04, 2023, 1:13 pm IST

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்!
Jun 04, 2023, 12:41 pm IST

புதன்கிழமை காலைக்குள் தண்டவாள சீரமைப்பு பணிகள் நிறைவடையும் - அஸ்வினி வைஷ்ணவ்
Jun 04, 2023, 11:57 am IST

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு
வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் சார்பில் பொதுநல மனு தாக்கல்
உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு
உச்சநீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்க விசாரிக்க கோரிக்கை
விசாரணையை 2 மாதத்தில் முடித்து அறிக்கை அளிக்க உத்தரவிடவும் கோரிக்கை
கவாச் பாதுகாப்பு முறையை அமல்படுத்த உத்தரவிடவும் மனுதாரர் கோரிக்கை
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+