ஒடிசா ரயில் விபத்தில் பலர் உயிரிழந்தது ஆழ்ந்த துயரம்..கடும் அதிர்ச்சி..நிவாரணம் அறிவித்த முதல்வர்
சென்னை: ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து நாட்டையும் நாட்டு மக்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.
ஒடிசா ரயில் விபத்து மீட்புப் பணிகளுக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலும் மீட்புப்பணிகள், அழைப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது தலைமைச் செயலாளர் இறையன்பு டிஜிபி , சைலேந்திரபாபு ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், விபத்து நிகழ்ந்த உடனே ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்கிடம் கேட்டறிந்தேன். இது குறித்து ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையும் தெரிவித்தேன். உடனடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அமைச்சர் உதயநிதி, சிவசங்கர் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து நமக்கு உடனுக்குடன் தகவல்களை தெரிவிப்பார்கள். அங்கேயே தங்கியிருந்து மீட்பு நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு முதலே உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்துள்ளேன். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு வரவும், ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகம் திரும்ப முடியாமல் தவிப்பவர்களுக்காகவும் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியுள்ள உறவினர்களை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து புவனேஸ்வருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் முதற்கட்டமாக விமானம் மூலம் திரும்ப உள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இந்த சூழ்நிலையில் இன்று ஒருநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் 100வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநில நிர்வாகத்தோடு அதிகாரிகள் தொடர்பில் இருக்கின்றனர். மருத்துவ மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம். விபத்தில் உயிரிழந்த தமிழக பயணிகளின் உறவினர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஒடிசா மாநிலத்தில் இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 280 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 900 பேர் வரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications