EXCLUSIVE: பலி 200ஐ தாண்டலாம்.. ரயில் விபத்தில் சிக்கிய தஞ்சாவூர் ராணுவ வீரரின் பதைபதைக்கும் பேட்டி
சென்னை: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் 200க்கும் அதிகமான பயணிகள் உயிரிழந்து இருக்கலாம் என்று அந்த ரயிலில் பயணித்த தஞ்சாவூரை சேர்ந்த ராணுவ வீரர் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டு இருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசேர் அருகே சரக்கு ரயில் மற்றும் டெல்லி துரந்தோ ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதுவரை வெளியான தகவலின்படி 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து இருக்கின்றன.

மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்தவர்களில் தஞ்சாவூரை சேர்ந்த வெங்கடேஷ் என்ற ராணுவ வீரரும் ஒருவர். இவர் ரயில் விபத்து தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு தொலைபேசி வாயிலாக விளக்கமளித்து இருக்கிறார்.
அவர் பேசுகையில், "கோரமண்டல் ரயில் பாலசேரை தாண்டி வந்துகொண்டு இருக்கும்போது எதிரே துரந்தோ ரயில் வந்தது. அது டெல்லியில் இருந்து வந்தது என்று நினைக்கிறேன். அப்போது 2 ரயில்கள் வந்த தண்டவாலத்துக்கும் இடையே சரக்கு ரயில் வந்துவிட்டது. அந்த சரக்கு ரயில் துரந்தோ ரயிலின் எஞ்சினுக்கு அருகே உள்ள பெட்டியின் மீது மோதியது.
சரக்கு ரயில் கோரமண்டல் ரயில் மீது இடிக்கவில்லை. கோரமண்டல்தான் துரந்தோ மீது இடித்துவிட்டது. பல பேர் காயமடைந்து இருக்கிறார்கள். இறந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். பலி எண்ணிக்கை 200க்கு மேல் இருக்கும். நான் பயணித்த ரயில் பெட்டி விபத்தில் சிக்கவில்லை. 7 பெட்டிகளுக்கும் மேல் தடம் புரண்டு உள்ளது. சுமார் 10 பெட்டிகள் தடம்புரண்டு இருக்கும்.
நான் இந்திய ராணுவத்தில் சிப்பாயாக இருக்கிறேன். தற்போது விடுமுறைக்காக ஊருக்கு சென்றுகொண்டு இருந்தேன். அப்போது இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துவிட்டது. நானும் ராணுவத்தில் மீட்புப் படையில்தான் இருக்கிறேன். விபத்து ஏற்பட்டவுடன் எனது கமாண்டருக்கு தகவல் தெரிவித்துவிட்டேன்.
எனது சொந்த ஊர் தஞ்சாவூர் அருகே உள்ள சிறிய கிராமம். அவ்வப்போது ஆம்புலன்ஸ் வந்துகொண்டு இருக்கின்றன. தீவிரமாக மீட்பு வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். உடல்களை அப்புறப்படுத்திக்கொண்டு உள்ளனர். மிகப்பெரிய விபத்து என்பதால் முழுமையாக முடிவடைய 2 நாட்கள் ஆகும்.
ஏனென்றால் ரயிலுக்கு உள்ளே எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. விபத்து ஏற்பட்ட இடம் காட்டுப்பகுதி அல்ல. முக்கிய சாலைதான். அப்பகுதி மக்கள் அதிக உதவிகளை செய்துகொண்டு இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர், போலீஸ், தீயணைப்பு துறையினர், மருத்துவர்கள், வருவாய் துறையினர் என அனைவரும் இங்கு உள்ளனர்.
இவர்களுக்கு முதல் உதவிதான் தேவைப்படுகிறது. சீரியசாக இருப்பவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். நான் வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் நிரம்பி இருந்தார்கள். எதிரே வந்த ரயிலை பற்றி எனக்கு தெரியவில்லை. எனக்கே வெயிட்டிங் லிஸ்டில் இருந்துதான் சீட் கிடைத்தது. RAC இல் சீட் உறுதியானது. B6 பெட்டியில் நான் இருந்தேன். இந்த பெட்டிக்கு எதுவும் ஆகவில்லை. இது ரயிலின் நடுப்பகுதியில் இருக்கும் பெட்டி." என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications