அந்த வளையத்தில் என்ன இருக்கும்? வெளியான ரயில்வே சீக்ரெட்.. ஒடிசா விபத்துக்கு இடையே டிரெண்டான பதிவு
சென்னை: இந்திய ரயில்வேயில் சிக்னல் கேட் எப்படி திறக்கப்படுகிறது, ரயில்கள் எப்படி இயக்கப்படுகிறது என்று பிரபல சமூக வலைதள பதிவர் ஒருவர் விளக்கி உள்ளார்.
ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 294 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 400 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 600 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கே இருந்த சரக்கு ரயிலுடன் கோரமண்டல் ரயில் மோதியதில் அடுத்த சில நிமிடங்களில் பெங்களூர் ரயிலும் மோத பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்திய ரயில்வேயில் நிலவும் சில பழைய வழக்கங்கள் குறித்து பிரபல சமூக வலைதள பதிவர் எஸ்கேபி கருணா போஸ்ட் செய்துள்ளார். இந்திய ரயில்வேயில் சிக்னல் கேட் எப்படி திறக்கப்படுகிறது, ரயில்கள் எப்படி இயக்கப்படுகிறது என்று அவர் விளக்கி உள்ளார்.
அவர் தனது போஸ்டில், 170 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட துறை. இந்தியாவில் மக்களுக்கு அறிமுகமான முதல் அறிவியியல் கண்டுபிடிப்பு. பெரும்பான்மையான இந்தியர்கள் மின் விளக்கைப் பார்ப்பதற்கு முன்பே இரயில் வண்டியைப் பார்த்தவர்கள்.
இந்த 170 ஆண்டுகால தொடர்ச்சியில் அதே வயதுள்ள மற்றத் துறைகள் 10 மடங்கு மாற்றம் அடைந்திருக்கும் என்றால் ரயில்வே 3 மடங்கு அடைந்திருந்தாலே அதிகம்.
இப்பவும் பிரிட்டிஷார் அமைத்த ரயில் பாலங்களின் மீது நமது அதிவேக நவீன ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. நாம் ரயில்களில் உறங்கிக் கொண்டிருக்கும் போது, அது ஓடும் தண்டவாளங்களை இணைக்கும் போல்ட், நட்டுகளின் ஆவரேஜ் வயது 70 ஆண்டுகள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஹார்ட்வேரை விடலாம்! சாஃப்ட்வேரை பார்ப்போம். இந்திய ரயில்வேயின் signal complexity, ஏர்பஸ் A380 fly by wire technology யில் கூட இருக்காது. தொடர்ச்சியான trial & error மூலம் உருவான சிஸ்டம் அது. Muscle memory போல தன்னியல்பாக சிக்னல்மேன்களின் கைகளும், டிராக் லைன்மேன்களின் அனுபவமும், ரயில் ஓட்டுநர்களின் பயிற்சியும் ஒத்திசைவாக செய்யும் மேஜிக் அது. எந்தவொரு பொறியியல் வல்லுநர்களுக்கும் அவை பெரிய புதிராகவே இருக்கும்.
சொல்லப் போனால் படித்தவர்களுக்கு எளிதில் புரியக்கூடாது என்பதற்காகவே அதை அப்படியே வைத்திருந்ததாக நண்பரின் அப்பா (ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்) சொல்லி கேட்டிருக்கிறேன்.
ரயில்வே பணிகள் தலைமுறை தலைமுறையாக வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. டிராக் லைன்மேன் தனது மகன்களை 12 வயதில் இருந்தே உடன் அழைத்துச் சென்று பயிற்சி தருவார்கள். எனவே அவர்கள் இறந்தால் வேறு வழியே இன்றி அந்தப் பையனுக்கு அதே வேலை கிடைக்கும். தென்னிந்தியாவை பொறுத்தவரை ஆந்திராகாரர்களும், வட இந்தியாவில் பீஹாரிகளும் இதில் ஆதிக்கம்.
வாக்கி டாக்கி, வயர்லெஸ் எல்லாம் வரும் முன்னரே அவர் அபாரமான தகவல் தொழில்நுட்ப முறையை கொண்டிருந்தனர். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். புரிகிறதா என்று பாருங்கள்.
ஒரு ஊர் ரயில்நிலையத்தை ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் கடக்கிறது. அந்த ஊரில் நிறுத்தம் இல்லை. ஆனாலும், அங்கே ரயில்வே கேட் போட்டு சாலையை மூடியாக வேண்டும் அல்லவா? அதற்கு ரயில் 20 கிமீ தொலைவில் வரும்போதே, அதற்கு முன் இருந்த ரயில்வே கேட்கீப்பர் ரயில் கடந்து விட்டது என சிக்னல் மாற்றுவார். அந்த சிக்னல் மாறியவுடன், இந்த சிக்னல் லாக் ஆகி விடும். உடனே இந்த கேட்கீப்பர் கேட்டை மூடுவார். ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு 6 அடி விட்டமுள்ள பிரம்பு வளையத்தை கையில் வைத்துக் காத்திருப்பார்.
இந்திய ரயில்வே :
— SKP KARUNA (@skpkaruna) June 3, 2023
170 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட துறை. இந்தியாவில் மக்களுக்கு அறிமுகமான முதல் அறிவியியல் கண்டுபிடிப்பு. பெரும்பான்மையான இந்தியர்கள் மின் விளக்கைப் பார்ப்பதற்கு முன்பே இரயில் வண்டியைப் பார்த்தவர்கள்.
இந்த 170 ஆண்டுகால தொடர்ச்சியில் அதே வயதுள்ள மற்றத் துறைகள் 10… pic.twitter.com/edVYkKSS5R
ரயில் வேகமாக ஸ்டேஷனை கிராஸ் பண்ணும்போது, ரயில் ஓட்டுநர் கையில் இருக்கும் ஒரு வளையத்தை ப்ளாட்பாரத்தில் வீசிவிட்டு, லாவகமாக மாஸ்டர் பிடித்திருக்கும் வளையத்துக்குள் கையை கோர்த்து வாங்கிக் கொள்வார். இது ஒரு நொடிக்குள் நடக்கும் செயல். ஒருவேளை அந்த வளையத்தை வாங்க முடியவில்லை என்றால் ரயிலை பிரேக் போட்டு நிறுத்தி வாங்கி ஆகணும். இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காகவே நான் தினமும் ஸ்டேஷனுக்கு போய் நிற்பேன். (அப்படியே நானும் ரிங் வீச பழகிக் கொண்டேன் என்பது வேற கதை).
சரி! அப்படி என்ன அந்த வளையத்தில் இருக்கும்? : அதன் ஒரு புறத்தில் சின்னதாக ஒரு பிரம்பு பெட்டி கட்டப்பட்டிருக்கும். அதற்கு உள்ளே ஒரு இரும்புச் சாவி. அதைக் கொண்டு போய் ரயில்வே கேட் லாக்கில் பொருத்தினால்தான் கேட்டை திறக்க முடியும். அதன் பிறகுதான் வழக்கமான சாலைப் போக்குவரத்து. . எனக்கு பிரமிப்பாக இருந்த அந்த விஷயம் உங்களுக்கு வேடிக்கையாகவும் இருக்கலாம்!
நம் கண் முன்னரே இப்படியான manual operations தான் எனில், நமக்கு பின் என்னென்ன நடந்ததோ! லைன்மேன், கேட் கீப்பர்கள் குடித்து விட்டு மயங்கியதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல மணி நேரம் ஆங்காங்கே நின்று இருந்த காலமெல்லாம் உண்டு.
பழைய கதை இருக்கட்டும். இப்பொது என்ன நடக்கிறது? இத்தனை காலம் ஆகியும் இன்னமும் 60% மனிதர்களைச் சார்ந்துதான் இத்தனை ஆயிரம் ரயில்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன. பரம்பரையாக வேலை தரும் வழக்கத்தை நிறுத்தி, தேர்வு வைத்து ஆள் நியமனங்களை தொடங்கி விட்டோம். அதன் சாதகங்கங்கள் ஒரு புறம் இருந்தாலும் மரபு வழி தொடர்ச்சி அற்று விட்டது. அதே தண்டவாளம், அதே சிக்னல், அதே பாலம், அதே வழி! ஆனால் அதற்கெல்லாம் பழக்கமில்லாத ஊழியர்கள்.

ஒரே நாளில், ஒரே ஆண்டில் சரி செய்து நவீனமாக்கி விட முடியாத இராட்சச இயந்திரம் இது. ஆனால், தொடர் முயற்சியாக அதைச் செய்யாமல் போனது பெரும் குற்றம். எப்போதோ ஒரு முறை பெரும் விபத்து நேர்ந்தாலே அதிர்ச்சி அடைகிறோம். நியாயத்துக்கு இந்த சிஸ்டம் ஒவ்வொரு நாளும் விபத்து இல்லாமல் ஓடுவதற்குதான் நாம் அதிர்ச்சி அடைய வேண்டும்.ஆட்சியாளர்களுக்காவது பழியை சுமக்க நேரு இருக்கிறார். மக்களுக்கு விதியை தவிர வேறென்ன இருக்கு?, என்று அவர் தனது போஸ்டில் குறிப்பிட்டு உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications