ரூ.6000 நிவாரண தொகை! விடுபட்டவர்களை தேடி வரும் அதிகாரிகள்.. இதையெல்லாம் எடுத்து ரெடியா வச்சிக்கோங்க
சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட 4 மாவட்டங்கள் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ரூ.6000 நிவாரண தொகையை வழங்கியது. இந்த 4 மாவட்டங்களில் வசிக்கும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் நிவாரணத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இது குறித்து கள ஆய்வில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். அவர்கள் சில ஆவணங்களையும் சரிபார்த்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் என்பது சென்னைக்கு மிகுந்த சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பாக பருவமழை, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளை சென்னை கடந்த 2015ம் ஆண்டிலிருந்து எதிர்கொண்டு வருகிறது. இப்படியாக கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதமும் சென்னையை புயல் தாக்கியது. வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வடதமிழகத்தை ஒட்டிய தெற்கு ஆந்திராவில் கரையை கடந்தது. இதனால் சென்னையில் பெரும் மழை பெய்தது.

வழக்கத்திற்கு மாறான மழை காரணமாக சென்னையின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பேருந்து,ரயில் மற்றும் விமான சேவைகள் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தன. சென்னையின் நகர்ப்புற பகுதிகளான அயனாவரம், பட்டாளம், திருவொற்றியூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வடிய மூன்று நாட்களுக்கும் மேல் ஆனது. புறநகர் பகுதிகளில் ஒருவாரம் வரை வெள்ளம் வடியாமல் இருந்ததால், மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டனர்.
சென்னை தவிர திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளும் வெள்ள பாதிப்பை எதிர்கொண்டன. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது. சென்னையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், மற்ற மூன்று மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.6000 நிவாரணம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. ஆனால், சென்னையில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டார்கள். எனவே, இவர்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
இதற்கான விண்ணப்பங்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டன. அதில், ஊர், ரேசன் அட்டை எண், மொபைல் எண், முகவரி, சென்னையில் தங்கியிருப்பதற்கான ஆதாரம் உள்ளிட்டவை இணைக்கப்பட கேட்டுக்கொள்ளப்பட்டது. லட்சக்கணக்கானோர் இதற்காக விண்ணப்பித்தனர். இந்நிலையில் விண்ணப்பித்தவர்களின் முகவரிகளை சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் வில்லிவாக்கம், அயனாவரம், பட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை ஆய்வில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆய்வில், நிவாரண தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஃபோன் செய்யப்படுகிறது. பின்னர் வீடு அடையாளம் காணப்பட்டு, வீட்டில் வசிப்பதற்கான ஆதாரங்களை ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்வில் ரேசன் அட்டை, மின் அட்டையை ஆதாரமாக காண்பிக்கலாம். ஆனால், சொந்த ஊர் முகவரியில் ரேசன் அட்டை இருக்கிறது எனில் வாடகை ஒப்பந்தம், கேஸ் பில், ஆதார் அட்டை ஆகியவற்றை காண்பித்து இருப்பிடத்தை உறுதி செய்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தம் இருந்தாலே போதுமானது.
இந்த ஆதாரங்களை அதிகாரி புகைப்படம் எடுத்துக்கொள்வார். மட்டுமல்லாது குடியிருக்கும் வீட்டின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வார். பின்னர் மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் அனைத்தும் சரியானவை என்று உறுதி செய்வார். இவை அனைத்தும் மொபைல் ஃபோனிலே செய்து முடிக்கப்படும்.
எனவே நிவாரணம் கோரி விண்ணப்பித்திருப்பவர்கள், நீங்கள் எந்த வீட்டில் வசிக்கிறீர்களோ அந்த வீட்டின் முகவரியில் இருக்கும் ரேஷன் அட்டையை தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும். ரேசன் அட்டை இல்லாதோர் மேற்குறிப்பிட்டதை போன்று தற்போது வசிக்கும் வீட்டின் முகவரியில் உள்ள வாடகை ஒப்பந்தம், கேஸ் பில், ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும். நிவாரண தொகை இன்னும் 3 நாட்களில் அல்லது பொங்கலுக்குள் நிச்சயம் கிடைக்கும் என இந்த ஆய்வின்போது அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications