எண்ணெய் கழிவுகள் பரவலை தடுக்க Boomerகள்! சிவதாஸ் மீனா பதில்.. பூமர்ன்னா என்ன தெரியுமா?
சென்னை: எண்ணெய் கழிவுகள் பரவுவதை தடுக்க Boomer எனும் தடுப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன என தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்நிகழ்வு 07.12.2023 அன்று சென்னை மாவட்டத்தில் ஒரு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கழிவுகளை அகற்றும் பணி 11.12.2023 அன்று தொடங்கப்பட்டுள்ளது. எண்ணெய் கழிவுகள் பரவுவதை தடுக்க (Boomer) தடுப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதுவரையிலும், திருவள்ளூர் மாவட்ட வரம்பிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய் கழிவுகள் படரவில்லை. 12.12.2023 அன்று திருவள்ளூர் மாவட்ட நீர்நிலை பகுதியிலிருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Boomers என்பது நீர் நிலைகளில் மிதக்கக் கூடியவை. இவை பெரும்பாலும் பிளாஸ்டிக், உலோகம் அல்லது இதர பொருள்களால் ஆனது. இது நீர் நிலைகளில் எண்ணெய் படர்வதை தடுக்கும். திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் படலம் கலப்பதாக அறப்போர் இயக்கம் நடத்திய கள ஆய்வுக்கு சிவதாஸ் மீனா இப்படி ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
அறப்போர் இயக்கம் ஜெயராமன் தனது கள ஆய்வு வீடியோவில் கூறியிருப்பதாவது: வணக்கம் நாம் இப்போது சாத்தங்காடு பகுதியில் இருக்கிறோம். இங்கு ஒரு கால்வாய் பார்க்கிறோம். இங்கு எண்ணெய் பரவியுள்ளது. ஏதோ ஒரு ஆலையின் எண்ணெய் கழிவு என்பது தெரிகிறது.
இது ஒரு சிறிய கால்வாய்தான். ஆனால் இந்த கால்வாய் கொசஸ்தலை ஆற்றுக்கு செல்கிறது. அப்படியென்றால் அங்கும் இந்த கழிவுகள் கலக்க வாய்ப்பிருக்கிறது. எந்த அளவுக்கு தண்ணீர் கருப்பாக இருக்கிறது என்பதை பாருங்கள். 2015 பெருவெள்ளத்திற்கு பிறகு நீர் நிலைகளில் நடக்கும் 4 பிரச்சினைகளை பேசி வருகிறோம்.
நீர் நிலைகளில் கழிவுகள், குப்பைகள் சேருவது, நீர் நிலைகளை தூர்வாராமல் இருப்பது, நீர் நிலை ஆக்கிரமிப்புகள், மிகப்பெரிய நீர் நிலைகளை இழந்ததன் விளைவுதான் வெள்ளத்தில் சிக்கும் நிலை உள்ளது. இந்த நீர் நிலைகளை பத்திரப்பதிவு துறையும் வருவாய் துறையும் எப்படி மாறி மாறி பட்டா பதிவு செய்து வருகிறார்கள் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏழைகள் செய்யும் ஆக்கிரமிப்புகள் விடலாம். ஆனால் பணக்காரர்களாகிய தொழிற்சாலைகள் நீர் நிலைகளில் செய்யும் அட்டூழியங்கள், ஆக்கிரமிப்புகளை தட் டிக் கேட்கக் கூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் தட்டி கேட்பதே இல்லை. தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெயராமன் பேசியிருந்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications