Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் மற்றொரு ஷாக் சம்பவம்! முதியவர் மீது பாய்ந்து குடலை உருவிய மாடு.. பொதுமக்கள் அச்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மாடு முட்டியதில் குடல் சரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாடுகளால் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னையின் மக்கள் தொகை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளும் அதிகரிக்கப்பட்டிருக்கிறதா? என்று கேட்டால் போதுமான அளவு இல்லை என்றே பதில் வருகிறது. மக்களுக்கே இருக்க இடம் இல்லாதபோது கால்நடைகள் வளர்ப்பதற்கு என்று தனியாக இடம் ஒதுக்குவதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இப்படியான சூழலில்தான் சென்னையில் மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் மாடுகளின் நடமாட்டத்தை தவிர்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

 old man seriously injured after being run over by a cow in Nanganallur, Chennai

இது அடிக்கடி விபத்துகளையும் உருவாக காரணமாக அமைந்துவிடுகிறது. அதாவது, கடந்த மாதம் சென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டியதில் 4ம் வகுப்பு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 10ம் தேதியன்று பிற்பகல் 3 மணியளவில் மாணவி பள்ளியை முடித்துக்கொண்டு மாணவி தனது தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று மாணவி மீது பாய்ந்தது. சுமார் 2 நிமிடங்களுக்கும் மேல் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் மாணவியின் முகம், வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மாட்டை விரட்டியதையடுத்து மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் மாடுகளை வீதிகளில் திரிய விடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் கறாராக உத்தரவிடப்பட்டது. இருப்பினும் இந்த உத்தரவை யாரும் சரியாக பின்பற்றுவதாக தெரியவில்லை. எனவே மற்றொரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. அதாவது நேற்றிரவு நங்கநல்லூரில் கண்ணன்(51) என்பவர் உழவர் சந்தை அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை மாடு ஒன்று சரமாரியாக தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலில் கண்ணனின் வயிறு கிழிக்கப்பட்டு குடல் வெளியே வந்திருக்கிறது. இதனால் ரத்த வெள்ளத்தில் கண்ணன் அங்கே துடிதுடித்து விழுந்திருக்கிறார். இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் கண்ணனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே அரும்பாக்கத்தில் இது போன்ற சம்பவம் நடந்தபோது மாநகராட்சி உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இன்று இதுபோன்ற மற்றொரு சம்பவம் நடந்திருக்காது என்று மக்கள் கூறியுள்ளனர்.

உழவர் சந்தையில் மீதியாக இருக்கும் காய்கறிகளை சாப்பிட மாடுகள் இந்த இடங்களில் அதிக அளவு உலவுகின்றன. இரவு நேரங்களிலும், பகல் நேரங்களில் சில தருணங்களிலும் மாடுகள் இது போன்று பொதுமக்கள் மீது பாய்வது வழக்கமாக நடந்து வருகிறது. எனவே மாடு வளர்ப்போர் அதை சரியாக பராமரிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+