பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ
சென்னை: தமிழகம் முழுவதும் மின்சார வாரியம் பழைய மீட்டர்களை அகற்றிவிட்டு, ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது.. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த புதிய மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறிவிடும் என்ற ஒருவித பீதி மக்களிடையே நிலவுகிறது.. பல வீடுகளில் மீட்டர் மாற்றப்பட்ட அடுத்த மாசமே கரண்ட் பில் டபுள் மடங்காக உயர்ந்துள்ளதாக புகார்களும் எழுந்துள்ளன.. நிஜமாகவே பழைய மீட்டருக்கும் புதிய மீட்டருக்கும் இடையே என்ன வித்தியாசம்? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நம்முடைய வீடுகளில் இருந்த பழைய அனலாக் மீட்டர்கள், இயந்திரத்தனமாக சுழலும் வட்டு அதாவது Rotating Disc முறையில் இயங்குபவை.. இதுதான் காலம் காலமாக நடைமுறையில் உள்ளது.. இவை வருடம் ஆக ஆக தேய்மானம் அடைந்து, அவற்றின் சுழற்சி வேகம் குறைந்துவிடும்.. இதனால் நீங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தை விடக் குறைவான அளவையே அவை கணக்கிடும்..

கரண்ட் பில் எகிறுதா
இது நுகர்வோருக்கு சாதகமாக தெரிந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக அது ஒரு பிழையாகவே பார்க்கப்படுகிறது.. ஆனால், தற்போது பொருத்தப்படும் டிஜிட்டல் மீட்டர்கள் ஒரு மைக்ரோ பிராசஸர் போல செயல்படுகின்றன..
இவை மிகக் குறைந்த மில்லி ஆம்பியர் மின்சாரத்தை கூட துல்லியமாகக் கணக்கிடும் திறன் கொண்டவை.. நாம் சுவிட்ச் ஆஃப் செய்திருந்தாலும், சாக்கெட்டில் செருகப்பட்டிருக்கும் மொபைல் சார்ஜர் அல்லது டிவியின் ஸ்டேண்ட்பை மோட் உறிஞ்சும் மின்சாரத்தை கூட இவை விடாமல் பிடித்துவிடுகின்றன..
தமிழக மின்சார வாரியம்
உங்கள் வீட்டு பழைய வயரிங் மற்றும் சுவர்களில் இருக்கும் ஈரப்பதம் காரணமாக ஏற்படும் மிகச் சிறிய எர்த் லீக்கேஜ் பழைய மீட்டர்களில் பதிவாகாது.. ஆனால், புதிய மீட்டர்கள் வந்தவுடன் இந்த சிறு மின் கசிவுகள் அனைத்தும் யூனிட்களாக மாறி உங்கள் பில்லை உயர்த்துகின்றன..
அதனால் மீட்டர் மாற்றிய பின் பில் கூடுகிறது என்றால் அது மீட்டரின் கோளாறு கிடையாது.. உங்கள் வீட்டின் மின் இணைப்பில் இருக்கும் குறைபாடே ஆகும்.. இதனைச் சரி செய்யாமல் மீட்டரைக் குறை சொல்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
ஸ்மார்ட் மீட்டர்கள்
ஸ்மார்ட் மீட்டர்களை பொறுத்தவரை ஆட்கள் நேரில் வந்து கணக்கெடுக்க தேவையில்லை என்பதால், ரீடிங் எடுப்பதில் நடக்கும் மனிதத் தவறுகள் முற்றிலும் தவிர்க்கப்படுகின்றன.. இது மின்சார வாரியத்திற்கு துல்லியமான வருவாயை தந்தாலும், சாதாரண மக்களுக்கு ஆரம்பத்தில் ஒரு பாரமாக தெரியலாம்..
எனவே மீட்டர் மாற்றிய பின் உங்கள் பில் திடீரென உயர்ந்தால் பதற்றமடைய தேவையில்லை.. முதலில் வீட்டின் அனைத்து சுவிட்சுகளையும் அணைத்துவிட்டு மீட்டரைப் பாருங்கள். அப்போதும் மீட்டரில் உள்ள விளக்கு எரிந்தால் உங்கள் வீட்டு வயரிங்கில் மின் கசிவு இருக்கிறது என்று அர்த்தம். உடனே ஒரு எலக்ட்ரிஷியனை கொண்டு அதனை சரி செய்தாலே உங்கள் மின்சார கட்டணம் பெருமளவு குறைய ஆரம்பித்துவிடும்..!!
அதேபோல உங்கள் வீட்டில் உள்ள பழைய குண்டு பல்புகளை அகற்றிவிட்டு தரமான எல்இடி பல்புகளை பயன்படுத்தலாம்.. ஏசி மற்றும் பிரிட்ஜ் போன்ற சாதனங்களை ஸ்டார் ரேட்டிங் கொண்டவையாக மாற்றினால் மின் நுகர்வு பாதியாகக் குறையும்.. சிலசமயம் சுவிட்ச் ஆஃப் செய்தாலும் சாக்கெட்டில் இருக்கும் பிளக்குகளை நீக்கிவிடுவது தேவையற்ற மின் விரயத்தைத் தடுக்கும்..!!
-
மின்சார வாரியம் ஷாக்! லட்சம் தந்தும் இருளில் டெல்டா விவசாயிகள்! 6 மாதம் தட்கல் திட்டத்தில் என்னாச்சு -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications