பழைய ஓய்வூதிய திட்டம்.. 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தில் 16 அரசு அதிகாரிகளின் பெயரை சேர்க்காத விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வருகிற ஆகஸ்டு 4-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. சமயமூர்த்தி, உதயச்சந்திரன், ராஜேஷ் லக்கானி, ஜெகன்நாதன் மற்றும் கிருஷ்ணன் உன்னி ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். தமிழ்நாடு அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 1991-ம் ஆண்டு பலரை பணியில் அமர்த்தி இருந்தது. பின்னர், அவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தார்கள். அவர்களுக்கு மாற்று பணி வழங்க அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

16 அரசு ஊழியர்கள்
இதன்படி சேக் அப்துல் காதர், எல்.அழகேசன், பி.சர்மிளா பேகம் உள்பட 16 பேருக்கு வணிக வரித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. இவர்கள் பணியை கடந்த 2004-ம் ஆண்டு முதல் வரையறை செய்து கடந்த 2010-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 2004ம் ஆண்டுக்கு பின்னரே வரையறை செய்யப்பட்ட காரணத்தால், இவர்களது பெயர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சர்மிளா பேகம் உள்ளிட்ட 16 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
அதில், ''எங்களுக்கு பணி வழங்க உச்ச நீதிமன்றம் 1999-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, எங்களது பணி 1996-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி முதல் கணக்கிட வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு அந்த உத்தரவை காலதாமதமாக நிறைவேற்றி, எங்களது பெயரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க முடியாது" இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியிருந்தார்கள்.
பழைய ஓய்வூதிய திட்டம்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, 'சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, மனுதாரர்களை 1996-ம் ஆண்டு பணி வரையறை செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தின் பெயர்களை சேர்க்க வேண்டும்'' என்று கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு அமல்படுத்தவில்லை.
ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகள்
இதையடுத்து, மனுதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் சமயமூர்த்தி, நிதித்துறை செயலாளர் .உதயச்சந்திரன், வருவாய் நிர்வாகத்துறை முதன்மை கமிஷனர் ராஜேஷ் லக்கானி, வணிகவரித்துறை கமிஷனர் ஜெகன்நாதன், கருவூலம் மற்றும் கணக்குத்துறை கமிஷனர் கிருஷ்ணன் உன்னி ஆகிய 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பனுக்கும் எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்கள்.
நேரில் ஆஜராக உத்தரவு
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஜி.பாலா டெய்சி ஆஜராகி வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பட்டு தேவானந்த் , பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட 6 அதிகாரிகளையும் வருகிற ஆகஸ்டு 4-ந்தேதி நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். முன்னதாக கடந்த வாரம் தான் சில ஐஏஏஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கில் ஆஜராகி மன்னிப்பு கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications