ஸ்டாலினை தரக்குறைவாக பேசிய விஜய்.. இந்த பழைய போட்டோவை பாருங்க.. கொஞ்சம் கூட நன்றியே இல்லை!
சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை மிகவும் தரக்குறைவாக பேசி விமர்சனங்களை செய்தார். அங்கிள் என்று குறிப்பிட்டு கடுமையாக பேசி இருந்தார். இந்த நிலையில்தான் விஜயின் பழைய போட்டோ ஒன்று தற்போது டிரெண்டாகி வருகிறது.
நேற்று மதுரை மாநாட்டில் விஜய் பேசுகையில், எம்ஜிஆர் இருக்கிற வரை யாராலும் முதல்வர் ஆக முடியவில்லை.. அப்படிப்பட்ட தலைவர் அவர். வெற்று விளம்பர மாடல் திமுக பாஜக உடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளது, ஒரு ரெய்டு வந்தால் போதும் உடனே டெல்லிக்கு போய் ரகசிய மீட்டிங் போடுகிறார்கள் , ஸ்டாலின் அங்கிள் - வெரி ராங்க் அங்கிள். மை டியர் அங்கிள்.. ஸ்டாலின் அங்கிள்.. சொல்லுங்க அங்கிள். உங்களை அப்பான்னு வேறு சொல்லனுமா.. சாரி அங்கிள்.. என்ன இதெல்லாம்.. வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள்.

ஸ்டாலின் மீது விஜய் கடுமையான விமர்சனம்
மதுரை கிழக்கில் விஜய் போட்டி என்றதும் ஆரவாரித்த தொண்டர்கள். கடைசியில் எல்லா தொகுதியில் விஜய்தான் போட்டி, அப்படி நினைத்து வாக்களியுங்கள் என்று விஜய் விளக்கம் அளித்தார். 234 தொகுதியிலும் நான் வேட்பாளர் என நினைத்து வாக்களியுங்கள்; இந்த முகத்துக்காக வாக்களித்தால், உங்க வீட்டிலுள்ள உங்க வேட்பாளர் ஜெயித்தது போல.
நான் ஒன்றும் மார்க்கெட் போன பின், அடைக்கலம் தேடி, அரசியலுக்கு வரவில்லை, படைக்கலத்தோடு வந்திருக்கிறேன். எல்லோரும் கட்சி ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போறதுக்கு முயற்சி பண்ணுவாங்க.. நாங்க ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போனதுக்கு அப்புறம்தான் கட்சியே ஆரம்பிச்சிருக்கோம்.
திமுகதான் எங்கள் எதிரி
எங்களுடைய ஒரே கொள்கை எதிரி பாஜகதான், ஒரே அரசியல் எதிரி திமுகதான், மாற்றமே இல்லை. டீலிங் போட்டு, கூட்டணி வச்சு அரசியல் செய்யும் கட்சி நாங்கள் இல்லை. நாங்கள் ஒன்று உலக மகா ஊழல் கட்சியும் இல்லை, பாஜக உடன் மறைமுக டீலிங் செய்யும் பாசிச கட்சியும் இல்லை. தவெக கையில் எடுத்துள்ள அரசியல், உண்மையான அரசியல், உணர்வுப்பூர்வமான அரசியல், நல்ல அரசியல், நல்லது மட்டுமே செய்யும் அரசியல். 2026ல் தவெக - திமுக இடையில்தான் போட்டியே, வேறு போட்டியே இங்கே இல்லை, என்று விஜய் பேசி இருந்தார்.
“நம்மால் பயனடைந்தவர்கள், நம்மிடம் நன்றி காட்டுவார்கள் என்று எதிர்ப்பார்க்கக் கூடாது என்பதே என் பொதுவாழ்வில் நான் கற்ற பெரும் பாடம்”
— Surya Born To Win (@Surya_BornToWin) August 21, 2025
- டாக்டர் கலைஞர்...👏💯
Repeat🔁 https://t.co/xygrOnwNuP pic.twitter.com/lVFMWsdJ12
டிரெண்டாகும் விஜயின் பழைய போட்டோ
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை மிகவும் தரக்குறைவாக பேசி விமர்சனங்களை செய்தார். அங்கிள் என்று குறிப்பிட்டு கடுமையாக பேசி இருந்தார். இந்த நிலையில்தான் விஜயின் பழைய போட்டோ ஒன்று தற்போது டிரெண்டாகி வருகிறது.
விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தவர். அவருடன் மிக அன்பாக இருந்தவர். வீட்டு நிகழ்வுகளுக்கு எல்லாம் அவரை சந்திரசேகர் அழைத்தது உண்டு. விஜய் சிறிய பையனாக இருந்த போது கூட கருணாநிதி பல முறை அவரின் வீடுகளுக்கு சென்றது உண்டு. பல நிகழ்வுகளில் திமுக அவரின் குடும்பத்துடன் உடன் நின்றுள்ளது. சர்க்கார் விவகாரத்தில் கூட விஜய்க்கு ஆதரவாக திமுக நின்றது.
ஜோசப் விஜய் என்ற சர்ச்சை வந்த போதும் கூட பாஜகவை எதிர்த்து விஜய்க்கு ஆதரவாக திமுக நின்றது. இந்த நிலையில்தான் விஜயின் பழைய போட்டோ ஒன்று தற்போது டிரெண்டாகி வருகிறது. விஜய் மற்றும் விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்கள் பலரும் "நம்மால் பயனடைந்தவர்கள், நம்மிடம் நன்றி காட்டுவார்கள் என்று எதிர்ப்பார்க்கக் கூடாது என்பதே என் பொதுவாழ்வில் நான் கற்ற பெரும் பாடம்" என்று கருணாநிதி சொன்ன வாக்கியத்தை பகிர்ந்து விமர்சனங்களை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications