சினிமாகாரர்கள்ன்னா தப்பு பண்ணுவாங்களா? அன்று தாட்பூட்டுனு கத்திய ஸ்ரீகாந்த்! இன்று என்னாச்சு? வைரல்!
சென்னை: போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த், "சினிமாகாரர்கள் என்றால் தவறு செய்வார்களா, அவர்களுக்கு ஏன் வீட்டை வாடகைக்கு கொடுக்க மாட்டேன்" என்கிறீர்கள் என கேட்கும் பழைய வீடியோ வைரலாகி வருகிறது.
எந்த நடிகர் அந்த பேட்டியில் அப்படி ஆதங்கபட்டாரோ, அவர்தான் போதை பொருளை பயன்படுத்தியதால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் வீட்டில் கடந்த சனிக்கிழமை பார்ட்டி வைக்கப்பட்டதாம். அந்த பார்ட்டியில் போதை பொருள் சப்ளை செய்யப்பட்டதாம். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், சிறையில் இருக்கும் போது போதை பொருள் எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்போது ஸ்ரீகாந்த் கூறுகையில், தயாரிப்பாளர் பிரசாந்த் (அதிமுக முன்னாள் நிர்வாகி) தீங்கரை எனும் படத்திற்கு ரூ 10 லட்சம் சம்பள பாக்கி இருந்தது. அவரிடம் நான் கேட்ட போதெல்லாம் எனக்கு கொக்கைன் கொடுத்தார். ஒரு கட்டத்தில் நானே கேட்டு வாங்கி பயன்படுத்தும் அளவுக்கு நான் addict ஆகிவிட்டேன் என தெரிவித்திருந்தார்.
போதை பொருள் கேஸில் சிறையில் இருக்கும் இவர், கலாட்டா சேனலுக்கு முன்பொரு முறை அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: சினிமாக்காரர்களுக்கு வீடு கொடுத்தால் பார்ட்டி வைப்பார்கள், சரியாக மெயின்டெய்ன் செய்ய மாட்டார்கள் என மக்களுக்கு தவறான கண்ணோட்டங்கள் உள்ளன.
எந்த துறையில் தவறு நடக்கவில்லை சொல்லுங்கள். அதனால்தான சினிமாக்காரர்கள் என்றால் பயப்படுகிறார்கள். நான் வடபழனியில் இருந்தேன். என் மனைவி நிறைமாத கர்ப்பமாக இருந்த போது அவருக்கு செக் அப் எல்லாம் கிரீம்ஸ் ரோடு அப்பல்லோவில்தான் இருந்தது.
லேபர் பெயின் வந்தால் வடபழனியில் இருந்து கிரீம்ஸ் ரோடு செல்வது ரொம்ப தூரம் என்பதால் அந்த மருத்துவமனைக்கு பக்கத்திலேயே ஒரு வீடு பார்த்து குழந்தை பிறக்கும் வரை வாடகைக்கு இருக்கலாம் என நினைத்தேன். மருத்துவமனைக்கு பக்கத்தில் தேடிய போது ஒரு வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள்.
அந்த வீட்டு உரிமையாளரிடம் போனில் பேசினேன். அவரும் எனக்கு வீடு கொடுப்பதாக சொன்னார். கிட்டதட்ட அந்த வீட்டை இறுதி செய்து வைத்திருந்தேன். மறுநாள் வீட்டை பார்க்க சென்றேன். என்னை பார்த்ததும் சினிமாகாரர்களுக்கு வீடு கொடுக்க மாட்டேன் என சொல்லிவிட்டார்.
ஒவ்வொருத்தருக்கும் பொழுதுபோக்குக்கு சினிமா வேண்டும், செல்ஃபி எடுக்கவும் சினிமாகாரன் வேண்டும். ஆனால் வீடு மட்டும் வாடகைக்கு தர மாட்டார்கள். நான் கேட்டேன், "நான் சினிமாவில் நடிப்பதால் உங்களுக்கு என்ன பிரச்சினை சார், நீங்கள் கேட்கும் வாடகையை 2 வருடத்திற்கு மொத்தமாக கொடுத்துவிடுகிறேன்" என்றேன்.
அவரோ, முடியவே முடியாது என்றுவிட்டார். பின்னர் வேறு ஒரு இடத்தில் வீட்டை பிடித்தேன். அவரும் அதையே சொன்னார். பிறகு கம்பெனி பெயரில் அக்ரிமென்ட் போட்டு அந்த வீட்டில் இருந்தோம். எனக்கு எந்த நபர் வீட்டை தர மாட்டேன் என்றாரோ அவரே, அவரது கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு விருந்தினராக வருமாறு அழைத்தார்.
நான் வேறு ஒரு சினிமாக்காரருக்கு எனது வீட்டை வாடகைக்கு கொடுத்தேன். கொரோனா காலத்தில் 1 ஆண்டிற்கு வாடகை கொடுக்க வேண்டாம் என்றேன். ஆனால் அவர்களோ 3 ஆண்டுகளுக்கு வாடகையே கொடுக்காமல் வீட்டையும் பூட்டிக் கொண்டு எங்கேயோ ஓடிவிட்டார்கள். நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நமக்கு நடக்கிறது என ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications