ஓமந்தூரார் மருத்துவமனை நிச்சயமாக தலைமை செயலகமாக மாறாது.. அடித்துச் சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை: ஓமந்தூரார் மருத்துவமனை நிச்சயமாக தலைமைச் செயலகமாக மாற்றப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் நிலவி வரும் இட நெருக்கடி, பாதுகாப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, ஓமந்தூரார் வளாகத்திற்கு தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியது. இதனால், ஓமந்தூரார் மருத்துவமனை மாற்றப்பட்டு, அங்கு தலைமைச் செயலகம் செயல்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன.

தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் வளாகத்துக்கு இடம் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு இரண்டு நாட்களில், தலைமை செயலகத்தில் உள்ள உணவுத் துறை செயலர் அறையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதாகவும், கோப்புகள் நனைந்ததாகவும் தகவல்கள் வந்தன. இதனால் தலைமைச் செயலகம் விரைவில் மாற்றப்படலாம் எனத் தகவல்கள் பரவின.
இந்நிலையில், கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரசு மருத்துவமனையில் ரூ.8.72 கோடி மதிப்பிலான நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரம், ரூ.3.94 கோடி மதிப்பிலான குடல் இரைப்பை உள்நோக்கி கருவி ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமைச் செயலகம் மாற்றம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது. 500க்கும் மேற்பட்ட முறை இந்த பதிலை நான் கூறிவிட்டேன். மருத்துவ தேவை அதிகரித்து வரும் நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை என்ற பெயரளவில் மட்டும் இருந்ததை இந்த ஆட்சியில் தான் பல சிறப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட்டது.
இருதய அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்டவை அதிகம் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பை விட ஒரு நாளுக்கு 2000த்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். ஓமந்தாரார் மருத்துவமனை ஒரு காலத்திலும் தலைமை செயலகமாக மாறாது. எடப்பாடி பழனிசாமியிடம் தைரியமாக சொல்லலாம்" எனத் தெரிவித்தார்.
-
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications